"நீ யாருப்பா.. லிஸ்ட்டிலேயே இல்லையே.." 3 கல்யாணம் செய்த பெண்.. கண்டமனூர் ஜமீன் கதையை மிஞ்சுகிறதே!!

குழந்தைக்கு அப்பா யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: "நீ யாருப்பா... லிஸ்ட்டிலேயே நீ இல்லையே.." என்று தலையை பிய்த்து கொண்டுள்ளனர்... ஒரு பெண் 3 பேரை கல்யாணம் செய்துள்ளார்.. ஆனால் இன்னொருத்தருடன் உறவில் இருந்துள்ளார்.. இப்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது.. அந்த குழந்தைக்கு அப்பா யார் என்று தெரியவில்லை!!

ராமநாதபுரம் மாவட்டம் கோரவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. குழந்தைகள் நல அலுவலகத்திற்கு திடீரென இவர் மீது ஒரு புகார் வந்தது.

தனது 8 மாத குழந்தையை இன்னொருவருக்கு விற்றுவிட்டதாக கூறப்பட்டது.. அதனால் அதிகாரிகள் தேவியை விசாரணைக்காக அழைத்திருந்தனர்.

விவாகரத்து

விவாகரத்து

அப்போதுதான் பல திடுக் தகவல்கள் வெளியே வந்தன.. கட்டிட வேலை செய்து வருகிறாராம் தேவி.. 3 வருடங்களுக்கு முன்பு ஒருவரை கல்யாணம் செய்துள்ளார்.. கட்டிட வேலை பார்க்கும் இடத்தில் வினோத் என்பவருடன் உறவு ஏற்பட்டுவிட்டது.. இந்த விஷயம் முதல் புருஷனுக்கு தெரிந்துவிட்டது.. அதனால் அவரை தேவி டைவர்ஸ் செய்துவிட்டார்.

தேவி

தேவி

வினோத்தை தேவி இன்னொரு கல்யாணமும் செய்துவிட்டார்... வினோத்தும் ஒரு வீடு பார்த்து தேவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் வேலைக்காக வினோத் வெளிநாடு போனார்.. காதல் மனைவிக்காக பாடுபட்டு 2, 3 மாதங்கள் பணம் அனுப்பி உள்ளார்.. அதற்கு பிறகு பணம் வருவது நின்றுவிட்டது.. அப்போது, வினோத் வெளிநாட்டிலேயே இறந்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

புகார்

புகார்

2 கணவனும் இல்லாத நிலையில், தேவி 3-வது கல்யாணம் செய்தார்... அவர் ஒரு மாற்று திறனாளி.. இந்த சமயத்தில் தேவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு இப்போது 8 மாதம் ஆகிறது... இந்நிலையில் செத்துபோன வினோத்தின் சொந்தக்காரர்கள், தேவியிடம் வந்து, அது வினோத் குழந்தை என்று சொல்லி... குழந்தையையும் பெற்று கொண்டு போய்விட்டனர்.

4-வது நபர்

4-வது நபர்

இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கையில்தான், சரத் என்பவர் தேவி தன்னுடைய குழந்தையை விற்றுவிட்டதாக குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளித்தார். இவர் யாரு 4-வது ஆள்? லிஸ்ட்டிலேயே இவர் இல்லை என்று பார்த்தால், தேவி சில மாதங்களுக்கு முன்பு சரத் என்பவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார்.. அதனால் கர்ப்பமாக பெண் குழந்தையையும் பெற்றுள்ளார் என்பது தெரிந்தது. இவ்வளவையும் கேட்ட அதிகாரிகள் மண்டைகாய்ந்து விட்டனர்.

டிஎன்ஏ சோதனை

டிஎன்ஏ சோதனை

இப்போது குழந்தைக்கு உண்மையான அப்பா யார் என தெரியவில்லை.. அதனால் டிஎன்ஏ டெஸ்ட்தான் சரி, கோர்ட்டை அணுகுங்கள் என்று அதிகாரிகள் சொல்லி உள்ளனர்.. அதுவரை குழந்தை யாரிடமும் ஒப்படைக்கப்படாமல், காப்பகத்தில் தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.. டெஸ்ட் எடுத்தால்தான் குழந்தை அப்பா யார் என்பது தெரியவரும்!

இதில் ஒரு ஹைலைட் என்ன தெரியுமா.. தேவி இப்போது திரும்பவும் கர்ப்பமாக இருக்கிறார்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+