ராமேஸ்வரத்தில் பிரபல டிக் டாக் அழகிகளுடன் வந்த இளைஞர்.. செய்த பகீர் காரியம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரபல டிக் டாக் அழகிகளை அடிக்கடி அழைத்து வந்த இளைஞரை நோட்டமிட்ட மீனவர்கள், இதுபற்றிய ரகசிய தகவலை போலீசாருக்கு கொடுத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் ஆபாச படம் எடுத்து பணம் சம்பாதித்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று (13-10-2021) தனியார் தங்கும் விடுதியில் சந்தேகப்படும்படியான ஒரு நபர் அடிக்கடி ரூம் போட்டு அழகிகளை கூட்டிவந்து கடற்கரை பகுதிகளில் சுற்றித் திரிவதாக ராமேஸ்வரம் போலீசாருக்கு ,மீனவர் ஒருவர் அளித்த ரகசிய தகவல் அளித்தார்.
அந்த நபரை கண்காணித்து சுற்றிவளைத்த ராமேஸ்வரம் போலீசார் அவரிடம் விசாரித்ததில் தூத்துக்குடி அருகே கோவில்பட்டி பகுதியை சேர்ந்த இமானுவேல் ராஜா என்கிற சக்தி என்ற பெயர் கொண்ட அவர் தமிழ்நாட்டில் முகநூலில் அறிமுகமாகும் டிக்டாக் அழகிகளின் செல்போன் நம்பர்களை குறித்து வைத்து அவர்களுடன் பேசி சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று கூறி ராமேஸ்வரத்திற்கு அழைத்து வருகிறார்.

ஏடிஎம் கார்டுகள்
அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி ,அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி ஆபாச படங்களை வெளியில் அனுப்பி பணம் சம்பாதிப்பது தெரியவந்தது. இது தொடர்பாக புகாரின் பேரில் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டுகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்த ராமேஸ்வரம் போலீசார் அவரை விசாரணை செய்து வருகின்றனர்.

சிறுமி பலாத்காரம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில், சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்தவர், 13 வயது சிறுமி. இவர் கடந்த, 30ல், வீதியில் விளையாடி கொண்டிருந்தார்.

பாலியல் வன்கொடுமை
அப்போது பெரியார் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி அருள், 45, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரது வீட்டிற்கு அழைத்து சென்று, பலாத்காரம் செய்துள்ளார். அப்போது கூச்சலிட்டாலோ, யாரிடமாவது கூறினாலோ கொன்று விடுவேன் என, சிறுமியை மிரட்டினார். இதனால் சிறுமி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தார்.

போக்சோவில் கைது
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமி உடல் வலியால் அவதிப்பட்டார். இது குறித்து அவரது தாய் விசாரித்தார். அப்போது அருள், தன்னை பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். பின்னர் அனைத்து மகளிர் போலீசில் தாய் அளித்த புகார்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருளை போக்சோவில் கைது செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications