கை, காலை நீட்டி கூட படுக்க முடியாது போல.. துபாயில் இந்த தீப்பெட்டி சைஸ் ரூம் வாடகை 62,000 ரூபாயாம்.!

Subscribe to Oneindia Tamil

ரியாத்: இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்று ஐக்கிய அமீரகம். இங்கு துபாயில் சின்ன தீப்பெட்டி சைஸ் வீடு AED 2,700, அதாவது இந்திய மதிப்பில் 62,000 ஆயிரம் வாடகை என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார்கள்.

துபாயை பொறுத்தவரை அங்கு ரியல் எஸ்டேட் மார்கெட்டில் ஆடம்பரமான வில்லாக்கள் முதல் சிறிய படுக்கைகள் கொண்ட அறைகள் வரை பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. அதேநேரம் அங்கு வாடகையும் நீங்கள் கணவிலும் எதிர்பார்க்காத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறது.. எந்தளவுக்கு உச்சத்தில் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையிலான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

Dubai s Tiny Room with 6 2 Lakh Annual Rent Sparks Debate on Social Media

தீப்பெட்டி சைஸ் வீடு

பால்கனியுடன் கூடிய அந்த சின்ன ரூமின் வாடகை மாதத்திற்கு AED 2,700, அதாவது இந்திய மதிப்பில் 62,000 ஆயிரம் ரூபாயாம்.. தீப்பெட்டி சைஸ் இருக்கும் இந்த ரூமின் வாடகை இவ்வளவு அதிகமாக இருப்பது அங்கு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் இந்த வீடியோ ரியல் எஸ்டேட் நிறுவனமான நெசன் சர்வீசஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து பலரும் இந்த வீடியோவை தங்கள் ட்விட்டரில் பகிர்ந்தனர். துபாயில் செல்வந்தர்கள் வசிக்கும் மெரினா பகுதியில் அமைந்துள்ள இந்த ரூமில் ஒரு படுக்கை மற்றும் அலமாரியை மட்டுமே பொருத்த முடியும். ஆனால், அதற்கு வாடகை 62,000 ரூபாயாம். மேலும் ரூ.11,618 (AED 500) டெபாசிட்டும் தனியாக செலுத்த வேண்டுமாம்.

ஒரு போர்ஷன்

துபாயில் பெரிய வில்லா அல்லது வீட்டின் ஒரு பகுதியை தனியாக பிரித்து இதுபோல வாடகைக்கு விடுவது வழக்கமான ஒன்று தான். இதை அங்கு போர்ஷன் என குறிப்பிடுவார்கள். அப்படி தான் மெரினா பகுதியில் உள்ள ஆடம்பர வில்லாவின் ஒரு போர்ஷனை பிரித்தே இந்த ரேட்டிற்கு வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிகிறது.

நெட்டிசன்கள்

இதன் சமூக வலைத்தள போஸ்ட்டில், "துபாயின் மெரினாவில் பால்கனியுடன் கூடிய போர்ஷன் வாடகைக்கு ரெடியாக இருக்கிறது. ஆனால், அந்த வீடு பெண்களுக்கு மட்டுமே" என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வரும் நிலையில், இது மிக பெரிய விவாதத்தையும் கூட சமூக வலைத்தளத்தில் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "இந்த போட்டோவை பார்த்தாலே பயமாக இருக்கிறது.. இந்த ரூமில் யாரால் வசிக்க முடியும்.. அப்படி துபாய் என்ன அவ்வளவு மக்கள் நெருக்கடி கொண்ட நாடா.. இல்லையே.. பிறகு ஏன் இந்தளவுக்கு அதிக விலை" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல இன்னும் சிலர் மும்பை ரியல் எஸ்டேட் மார்கெட் உடனும் இதை ஒப்பிட்டு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

காரணம் என்ன

துபாயின் ரியல் எஸ்டேட் மார்கெட் கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு பெரும்பாலான இடங்களில் வாடகை 8% முதல் 15% வரை அதிகரித்துள்ளது. இன்னும் சில இடங்களில் அதை விடவும் கூட அதிகரித்துள்ளது. அந்நாட்டு அரசு வாடகைக்கு புதிய சட்டத்தை அமல்படுத்தியதே வாடகை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+