சவுதியில் மோசமான நிலைமை.. வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

ரியாத்: ''தற்போதைய சூழலில் சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும்'' என்று இந்தியர்களுக்கு சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளது.

houthi-attack-row-indians-be-alerts-and-stay-indoors-as-necessary-in-saudi-arabia-says-indian-emba

இதுதொடர்பாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் இன்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ''தற்போதைய சூழலில் சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தேவைகளுக்கு ஏற்ப வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். அவ்வப்போது அரசு தரும் அறிவுரைகளை பின்பற்றுவதோடு, அதிகாரப்பூர்வமான லோக்கல் சேனல்களின் அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும். ரியாத்தில் உள்ள தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணை தூதரகம் மற்றும் விஎஃப்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகள் தொடர்ந்து வழக்கம்போல் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது நடக்கும் நிகழ்வுகள் தொடர்பாக ஏதாவது ஒரு வீடியோ அல்லது பிற செய்திகளை ரிபோஸ்ட்டிங் செய்ய வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்படுகிறது. 24X7 என்ற அடிப்படையில் உதவி மையஙம் திறக்கப்பட்டுள்ளது. அதனை 80024 71234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதுதவிர இந்திய தூதரகத்தை எக்ஸ் வலைதளத்தில் @IndinaembRiyah என்ற முகவரியிலும், பேஸ்புக்கில் IndianSaudArabia, இன்ஸ்டாகிராமில் indianembriyadh, லிங்க்ட்இன் பக்கத்தில் Embassy of India in riyadh என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பிற்கு முக்கிய காரணம் சவுதி அரேபியா மீது நடத்தப்படும் தாக்குதல் தான். சவுதி அரேபியாவிற்கும், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. இந்த மோதல் தற்போது வலுத்துள்ளது.

ஹவுதிகள் அமைப்பினர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் அபா விமான நிலையத்தை ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் பலியாகி உள்ளன.

இன்றும் ஏவுகணை தாக்குதலை ஹவுதிகள் நடத்திய நிலையில் அதனை இடைமறித்ததாக சவுதி அரேபியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் தான் இந்தியர்களின் பாதுகாப்பு கருதி வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுரை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+