80 மாடி கட்டடம் போச்சே.. சவுதியின் இதயத்தில் விழுந்த அடி.. உயரமான டவரை தாக்கிய ஹவுதிகள்.. பெரும் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள 1,263 அடி உயரம் கொண்ட நாட்டின் உயரமான கட்டடத்தை குறிவைத்து ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கட்டடம் சேதமடைந்துள்ள நிலையில் அந்த கட்டடம் குறிவைத்து தாக்கப்பட்டது ஏன்? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

houthi-missile-hits-saudi-arabias-tallest-tower

சவுதி அரேபியாவிற்கும், ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகளுக்கும் இடையே கடுமையாக மோதல் உள்ளது. கடந்த சில நாட்களாக இருதரப்பு இடையே மோதல் இல்லாமல் போனது. ஆனால் நேற்று மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

சவுதி அரேபியாவை குறிவைத்து மீண்டும் ஹவுதிகள் தாக்குதலை தொடங்கி உள்ளன. நேற்று காலை மற்றும் மாலையில் தலைநகர் ரியாத்தில் உள்ள 'கிங் அப்துல்லா' நிதி மாவட்டத்தில் உள்ள உயரமான கட்டடங்களை குறிவைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் சவுதி அரேபியாவின் உயரமான கட்டடம் ' 'பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் டவர்' சேதமடைந்துள்ளது. சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியத்தின் கட்டடம் இதுவாகும். இந்த டவர் 80 மாடிகளை கொண்டது. தரையில் இருந்து 1,263 உயரம் கொண்ட இந்த கட்டடம் தான் தற்போது சேதமடைந்துள்ளது.

ஹவுதிகளின் ஏவுகணைகள் தாக்கியதில் சில தளங்கள் சேதமடைந்துள்ளது. அதேபோல் அதனருகே உள்ள கட்டங்களும் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஹவுதிகள் பொறுப்பேற்றுள்ளனர். தங்களின் ஏவுகணை தான் இந்த கட்டடத்தை தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலை சவுதி அரேபியாவும் உறுதி செய்துள்ளது. சவுதி அரேபியாவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், ''ரியாத்தின் பைனான்சியல் சென்டர் டவர் சில தளங்களில் சேதங்கள் நடந்துள்ளன. அதன் அருகே உள்ள கட்டடங்களும் சேதப்பட்டுள்ளது. இருப்பினும் உயிர் பலியோ அல்லது காயங்களோ அதிர்ஷ்டவசமாக ஏற்படவில்லை'' என கூறியுள்ளதாக 'எஸ்பிஏ ஏஜென்சி' செய்தி வெளியிட்டுள்ளது. 'எஸ்பிஏ ஏஜென்சி'யின் விரிவாக்கம் 'சவுதி பிரஸ் ஏஜென்சி' என்பதாகும். இது சவுதி அரேபியா அரசின் அரசு செய்தி நிறுவனமாகும்.

ஹவுதிகளின் இந்த தாக்குதல் சவுதி அரேபியாவிற்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த கட்டடம் சவுதி அரேபியாவிற்கு மிகவும் முக்கியமானதாகும். தற்போது ஹவுதிகள் குறிவைத்து தாக்கி உள்ள இந்த டவரில் தான் சுமார் 1.2 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்ட சவுதி அரேபியாவின் அரசு முதலீட்டு நிதியத்தின் (Sovereign Wealth Fund) தலைமையகம் அமைந்துள்ளது. அதோடு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் லட்சியமான 'விஷன் 2030' திட்டத்தை சாதிக்க மிகவும் முக்கியமான இடமாகும்.

சவுதி அரேபியாவின் நிதி மாவட்டத்தை ஹவுதிகள் குறிவைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு நவம்பர் 8 ம் தேதி 'வானத்தில் உள்ள வில்லாக்கள்' என அழைக்கப்படும் சவுதியின் அராம்கோ டவரை ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் தற்போது சவுதி அரேபியா - ஹவுதிகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+