"பறக்கும் மைதானம்.." 1150 அடி உயரத்தில் சவுதி காட்டும் பிரம்மாண்டம்.. இனி அனல் பறக்க போவது கன்பார்ம்
ரியாத்: கச்சா எண்ணெய் வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு சவுதி அரேபியா பல புதிய வியக்கத்தக்கச் சாதனைகளைப் படைத்து வருகிறது. அப்படித் தான் இப்போது சவுதி 350 மீட்டர் உயரத்தில் கிட்டத்தட்ட ஒரு பறக்கும் மைதானத்தைக் கட்டவுள்ளனர். ஒரே நேரத்தில் 46,000 பேர் அமரும் வசதியைக் கொண்ட இந்த மைதானத்தின் சிறப்புகள் குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போது உலகிலேயே மிகப் பிரபலமான விளையாட்டாகக் கால்பந்து தான் இருக்கிறது. பெரும்பாலான உலக நாடுகளில் கால்பந்து போட்டிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். கால்பந்து போட்டிகளை உலகெங்கும் தேடிச் சென்று பார்க்கும் வெறித்தனமான ரசிகர்கள் கூட பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.

உலக கோப்பை கால்பந்து
அப்படி உலகெங்கும் இருந்து ரசிகர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் தொடராகக் கால்பந்து உலக கோப்பை இருக்கிறது.. இதனால் பல உலக நாடுகள் இந்தப் போட்டியை நடத்த ஆர்வம் காட்டும் கடந்த 2022ல் இதனை கத்தார் வெற்றிகரமாக நடத்தி முடிந்தது. அடுத்தாண்டு இதை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அதேபோல 2030 உலகக் கோப்பையைத் தென் அமெரிக்க நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
அதைத் தொடர்ந்து 2034 உலக கோப்பையை சவுதி அரேபியா நடத்தும் உரிமையை சவுதி அரேபியா பெற்றுள்ளது. அதற்கு இன்னும் 9 ஆண்டுகள் இருந்தாலும் கூட இப்போதே உலகக் கோப்பையை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய விளையாட்டு தொடர்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து தொடரை உலகமே வியக்கும் வகையில் நடத்திக் காட்ட சவுதி திட்டமிட்டிருக்கிறது.
பறக்கும் மைதானம்
இதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்ய சவுதி ஏற்கனவே தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உலகின் முதல் "ஸ்கை மைதானம்" அமைக்க சவுதி முடிவு செய்துள்ளது. இதற்கு NEOM மைதானம் எனப் பெயர் இருந்தாலும் இதைப் பலரும் ஸ்கை மைதானம் என்றே குறிப்பிடுகிறார்கள்.
சவுதி இளவரசர் பின் சல்மானின் கனவுத் திட்டமான தி லைன் ஸ்மார்ட் சிட்டியில் அமையவுள்ள இந்த மைதானம், தரையிலிருந்து 1,150 அடி (350 மீட்டர்) உயரத்தில் கட்டப்படும். சுமார் 1 பில்லியன் டாலர் செலவில் உருவாகும் இந்த மைதானத்தின் கட்டுமானப் பணிகள் 2027 இல் தொடங்கி 2032இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை நடத்த உரிமை கோரிச் சமர்ப்பித்த விண்ணப்பத்தில் இவை குறிப்பிடப்பட்டு இருந்ததால்.. அதை அதிகாரப்பூர்வத் தகவலாகவே கருத முடியும்.
திட்டம் என்ன
2034 உலகக் கோப்பையின் க்ரூப் போட்டிகள், ரவுண்டு ஆஃப் 32, ரவுண்டு ஆஃப் 16 மற்றும் காலிறுதிப் போட்டிகள் இந்த ஸ்கை மைதானத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.. ஒரே நேரத்தில் 46,000 பேர் இந்த மைதானத்தில் அமர்ந்து போட்டியைக் கண்டு ரசிக்கலாம். சூரிய மற்றும் காற்றாலை என புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மூலம் இந்த மைதானம் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகம் காற்று மாசு ஏற்படாத வகையிலும் இந்தக் கட்டிடம் கட்டப்படுகிறது.
பக்கா பிளான் ரெடி
உலக கோப்பை முடிந்த பிறகும் கூட இது ஒரு சவுதி கால்பந்து அணியின் ஹோம் டீமாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கால்பந்து போட்டிகள் நடைபெறாத நேரத்தில் பிற விளையாட்டுகள், இசை நிகழ்ச்சிகளை இங்கு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வளவு செலவில் கட்டப்படும் மைதானம் ஆண்டு முழுவதும் செயல்படும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications