புது போர் வந்தாச்சி? ஹவுதிகள் மீது குண்டுவீசிய பாக். போர் விமானங்கள்! சவுதி அரேபியாவிற்காக அதிரடி

Subscribe to Oneindia Tamil

ரியாத்: மத்திய கிழக்கில் புதிதாக போர் மேகங்கள் சூழ தொடங்கி உள்ளன. சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்காக 'மெக்கா' ஒப்பந்தப்படி பாகிஸ்தான் களமிறங்கி உள்ளது. பாகிஸ்தானின் 8 ஆயிரம் வீரர்கள் சவுதி அரேபியாவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் இன்று அதிரடியாக தாக்குதல் நடத்தி உள்ளன. இதனால் புதிய போர் வெடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

pakistan-air-force-fighter-jets-used-in-strikes-against-yemens-houthis-newyork-times-report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் தொற்றி உள்ளது. இஸ்ரேல் - காசா போர், ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் - அமெரிக்காவின் போர் முடிவடைந்த நிலையில் தற்போது புதிய போர் வெடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த 2 போர்களும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. தற்போது போர் முடிவடைந்துள்ளது.

ஆனால் தற்போது புதிதாக போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை போர் அச்சம் என்பது சவுதி அரேபியா மற்றும் ஹவுதிகள் இடையே தான் உள்ளது. ஹவுதிகள் என்பவர்கள் ஏமனில் செயல்பட்டு வரும் ஒரு ஆயுதகுழுவாகும். இந்த ஹவுதிகள் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் சவுதி அரேபியாவிற்கும், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஹவுதிகள் கடந்த சில நாட்களாக சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் அபா விமான நிலையத்தை நோக்கி ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். தற்போது வரை 3 வெளிநாட்டினர் பலியாகி உள்ளனர்.

இதனால் சவுதி அரேபியா ஹவுதிகளுக்கு பதிலடி கொடுக்க தயாராகிவிட்டது. 'மெக்கா' ஒப்பந்தப்படி பாகிஸ்தானிடம் உதவி கோரியது. 'மெக்கா' ஒப்பந்தம் என்பது சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி இந்த 3 நாட்டில் யார் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதனை தங்கள் மீதான தாக்குதலாக கருதி பதிலடி கொடுக்கப்படும். படை வீரர்கள், போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்படும் என்பது தான்.

அந்த வகையில் தான் சவுதி அரேபியா மீதான தாக்குதலை தங்கள் மீதான தாக்குதலாக எடுத்து கொண்டு 'மெக்கா' ஒப்பந்தப்படி பாகிஸ்தான் உதவி செய்கிறது. முதற்கட்டமாக பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவிற்கு 8 ஆயிரம் வீரர்கள் தரையிறங்கி பாதுகாப்பு பணியை தொடங்கி உள்ளனர். இதற்கு அடுத்தக்கட்டமாக பாகிஸ்தானின் போர் விமானங்கள் தற்போது ஏமனில் உள்ள ஹவுதிகளை குறிவைத்து குண்டுவீசி தாக்குதலை தொடங்கி உள்ளதாம்.

இதனை அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ராணுவ அதிகாரி அளித்த பேட்டியில், ''ஹவுதி ஆயுத குழுவினரை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களில் பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+