"ஒரே அலறல்!" அந்தரத்தில் 2ஆக உடைந்த ராட்டினம்.. 23 பேர் காயம்.. சவுதியில் மோசமான விபத்து.. திக்திக் வீடியோ
ரியாத்: சவுதியில் உள்ள பிரபல கேளிக்கை பூங்காவில் '360 டிகிரி' என்ற ரைட் திடீரென பாதியாக உடைந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேரின் உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பி இருக்கிறது.
இளைஞர்கள் விரும்பி செல்லும் இடங்களில் ஒன்றாகக் கேளிக்கை பூங்காக்கள் இருக்கிறது. அங்குப் பல த்ரில் ரைட்கள் இருக்கும். அதில் இருக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை நம்பியே மக்கள் அந்த ரைட்களில் செல்வார்கள். ஆனால், சில சமயம் பாதுகாப்பு நடைமுறைகளைத் தாண்டியும் விபத்துகள் நடந்துவிடும். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது சவுதியில் நடந்துள்ளது.

சவுதி விபத்து
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவில், '360 டிகிரி' என்ற ரைட் திடீரென பாதியாக உடைந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 23 பேர் காயமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.. அவர்களில் சிலரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
அங்குள்ள தைஃபில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவில், வியாழக்கிழமை இந்த விபத்து நடந்துள்ளது. அந்த ரைட்டில் பலர் இருந்த நிலையில், திடீரென அது பழுதடைந்து இரண்டாக உடைந்தது. இதில் குறைந்தது 23 பேர் காயமடைந்தனர். சிலர் படுகாயமடைந்துள்ளனர். தைஃபின் அல் ஹதா பகுதியில் அமைந்துள்ள கிரீன் மவுண்டன் பார்க் என்ற கேளிக்கை பூங்காவில்தான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது.
பகீர் வீடியோ
'360 டிகிரி' என்று அழைக்கப்படும் இந்த ரைட்டில் நடுவில் இருந்த கம்பம் திடீரென இரண்டாக உடைந்து விழுவது தெளிவாகத் தெரிகிறது. அந்த வீடியோவில் தொடக்கத்தில் மக்கள் முன்னும் பின்னும் ஊஞ்சலாடும் அந்த ரைட்டை என்ஜாய் செய்து வருகிறார்கள். அப்போது திடீரென, அந்த ரைட் உடைகிறது. ரைடின் மைய கம்பம் பாதியாக நொறுங்கி, பெரும் சத்தத்துடன் சரிந்து விழுகிறது.
Terrifying moment in Taif, Saudi Arabia as the “360 Degrees” ride at Green Mountain Park snapped mid-swing and collapsed with people onboard. At least 23 were hurt, 3 critically. The park is now shut as officials investigate.pic.twitter.com/H7uQ1drN2I
— Volcaholic 🌋 (@volcaholic1) July 31, 2025
இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்டமாகத் தகவல் வெளியாகியுள்ளது.. ரைடில் இருந்தவர்கள் அலறியபடியும் கத்தும் வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பி இருக்கிறது.
என்ன நடந்தது
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் இது குறித்துக் கூறுகையில், "மைய கம்பம் அதிவேகமாகச் சுற்றியது. அப்போதே ஏதோ தவறு நடக்கிறது என்பதை யூகித்தோம். இந்தச் சூழலில் தான் திடீரென அது உடைந்து அப்படியே விழுந்தது. அதில் பலர் காயமடைந்தனர். சிலருக்குக் காயம் மோசமாக இருக்கிறது. காயமடைந்தவர்களை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்" என்றார்.
அந்த கேளிக்கை பூங்காவில் முதலுதவி டீம் சரியாக இருந்துள்ளது. இதனால் விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடனே முதலுதவி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்குள் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்திற்கான காரணத்தைக் கண்டறியச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். காயமடைந்தவர்களுக்குச் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
டெல்லி விபத்து
இதேபோன்ற ஒரு சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் நிகழ்ந்தது. கடஸ்பேரா அருகே உள்ள பிரபல பார்க்கில் ரோலர் கோஸ்டர் சவாரி ஒன்றிலிருந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்தார். 24 வயதான அந்த பெண் பிரியங்கா என்று அடையாளம் காணப்பட்டது. சீட் பெல்ட் செயலிழந்ததால் அந்த பெண் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications