இந்திய பொருட்கள் வேண்டாம்.. திடீரென்று தடை போட்ட சவுதி அரேபியா.. பின்னணியில் ஷாக் காரணம்
ரியாத்: நம் நாட்டுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. இருநாடுகள் இடையேயான வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் திடீரென்று நம் நாட்டில் இருந்து அனுப்பப்படும் கோழி, முட்டை உள்ளிட்டவற்றுக்கு சவுதி அரேபியா திடீரென்று தடை விதித்துள்ளது.
இதனை சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த ஆணையம் சார்பில், ''பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த லிஸ்ட்டில் இந்தியா மட்டுமின்றி பிற 39 நாடுகளும் உள்ளன. அதன்படி அதன்படி ஆப்கானிஸ்தான், அசர்பைஜான், ஜெர்மனி, இந்தோனேஷியா, ஈரான், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, பல்கேரியா, வங்கதேசம், தைவான், ஜிபூட்டி, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈராக், கானா, பாலஸ்தீனம், வியட்நாம், கம்போடியா, கஜகஸ்தான், கேமரூன், தென் கொரியா.
வடகொரியா, லாவோஸ், லிபியா, மியான்மர், யுனைடெட் கிங்டம், எகிப்து, மெக்ஸிகோ, மங்கோலியா, நேபாளம், நைஜர், நைஜீரியா, ஹாங்காங், ஜப்பான், புர்கினா பாசோ, சூடான், செர்பியா, ஸ்லோவேனியா, ஐவரி கோஸ்ட் மற்றும் மான்டெனீக்ரோ ஆகிய நாடுகளிடம் இருந்து கோழி இறைச்சி, முட்டை உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
இதற்கு தடை நடவடிக்கைக்கு முக்கிய காரணம் பறவை காய்ச்சலாகும். தற்போது நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நம் நாடு உள்பட 40 நாடுகளிடம் இருந்து கோழி இறைச்சி, முட்டை உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்த தடை என்பது தற்காலிகமானது தான். பறவை காய்ச்சல் பரவல் தீரும்பட்சத்தில் மீண்டும் சவுதி அரேபியா நம் நாடு உள்பட பிற நாடுகளிடம் இருந்து மீண்டும் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications