10 கிலோ தங்கத்தில் ஜொலிக்கும் ‛துபாய் உடை’.. ரூ.11 கோடி மதிப்பாம்.. சவுதி நிறுவனம் கின்னஸ் சாதனை
ரியாத்: அரபு நாடுகளின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சவுதி அரேபியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நகை கடை நிறுவனம் ஒன்று ரூ.11 கோடி செலவில் 10 கிலோ எடையில் தங்க உடை வடிவமைத்து காட்சிப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த உடையின் சிறப்பம்சங்கள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சவுதி அரேபியாவை தலைமையிடமாக கொண்டு அல் ரோமைசான் தங்கம் மற்றும் நகை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஷார்ஜா வாட்ச் அண்ட் ஜூவல்லரி கண்காட்சியில் தங்க உடை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உடை தற்போது புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மொத்தம் 10.0812 கிலோ எடையில் அந்த உடை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.11 கோடியாகும்.
இந்த உடை கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதில் மொத்தம் 4 முக்கிய அம்சங்கள் உள்ளன. அதாவது உடையின் ஒரு பகுதியாக 398 கிராமில் தங்க கிரீடம், 8 கிலோ 810.60 கிராமில் நெக்லஸ், 134.1 கிராம் எடையில் கம்மல் மற்றும் 738.5 கிராம் எடையில் ஹியார் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 21 காரட் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் உலகிலேயே அதிக எடை கொண்ட உடையாக இது அமைந்துள்ளது. இதனால் இந்த உடை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அரபு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த உடை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ‛துபாய் உடை' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த உடையில் தங்கம் தவிர விலைமதிப்புள்ள கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி உடையை தயாரித்த அல் ரோமைசான் கோல்ட் நிறுவனத்தின் பிராந்திய துணை மேலாளர் மொஹ்சென் அல் தாய்பானி கூறுகையில், ‛‛நுணுக்கமான துல்லிய வேலைப்பாடுகளுடன் இந்த உடை தயாரிக்கப்பட்டுள்ளது. அரபு நாகரிகத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆடை தயாரிக்கப்பட்டுள்ளதாக சவுதி நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கம் மற்றும் நகை வேலையில் அமீரகம் தான் டாப் என்பதை நிரூபிக்கும் நோக்கத்தில் இந்த உடை உருவாக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இந்த கண்காட்சியில் விலை மதிப்பற்ற தங்க உடை மட்டுமின்றி 1.5 மில்லியன் திராம் மதிப்புள்ள தங்க சைக்கிளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் பலரை கவர்ந்துள்ளது. இந்த கண்காட்சியில் இத்தாலி, இந்தியா, துருக்கி, அமெரிக்கா, ரஷ்யா, யுனைடெட் கிங்டம், ஜப்பான், சீனா, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர்கள், நகை கடை உரிமையாளர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்று வருகின்றனர்.
-
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications