ஹார்முஸுக்கு பிறகு ஒரே நம்பிக்கை "யான்பு".. அதையும் விடாமல் தாக்கும் ஈரான்! கொந்தளிக்கும் சவுதி
ரியாத்: மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக இதர வளைகுடா நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் யான்பு துறைமுகம் வழியாக வர்த்தகம் நடந்து வந்த சூழலில் அதுவும் இப்போது பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு வந்தால் அது மிகப் பெரிய பேரழிவையே ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
சவுதி அரேபியாவின் யான்புவில் உள்ள அராம் கோ நிறுவனத்தின் சாம்ரெஃப் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது வான்வழித் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஈரான் எரிசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பதிலடியாகக் கத்தார் மற்றும் ஐக்கிய அமீரகத்தை ஈரான் தாக்கி வருகிறது.

தாக்குதல்
இந்தச் சூழலில் தான் சாம்பெஃப் சுத்திகரிப்பு மையம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நல்வாய்ப்பாக இதில் பாதிப்பு குறைவாகவே ஏற்பட்டதாகச் சவுதி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு முன்பே, சாம்ரெஃப் உள்ளிட்ட பல வளைகுடா பிராந்திய நிறுவனங்களுக்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதாவது தாக்குதல் நடத்தப் போகிறோம் உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள் என எச்சரிக்கை விடுத்த பிறகே ஈரான் தாக்குதலை நடத்தியிருந்தது.. இதுவரை இத்தாக்குதல் குறித்து சவூதி அராம் கோவ் இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
அச்சுறுத்தல்
இந்த தாக்குதல் உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த மாதம் போர் தொடங்கிய பிறகு ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியது. உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே சென்றது. அதை ஈரான் முடக்கிவிட்டு வரிசையாக மிரட்டல் கொடுத்து வருகிறது. இதனால் அன்று முதல், யான்பு துறைமுகம் தான் வளைகுடா அரபு நாடுகளுக்கான முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழிகளில் ஒன்றாகச் செயல்படுகிறது.
சுற்றிச் சுற்றி தாக்குதல்
மற்றொரு முக்கிய ஏற்றுமதி முனையான ஐக்கிய அமீரகத்தின் புஜைரா துறைமுகமும் உள்ளது. ஆனால், இந்த இரண்டின் மீதும் ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த வியாழக்கிழமை வரை அங்குச் சரக்கு ஏற்றும் ஏற்றுமதி பணிகள் எதாவது நடந்தனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்தளவுக்கு மத்திய கிழக்கில் நிலைமை மோசமாக இருக்கிறது.
ஈராக் மற்றும் ஈரானை உள்ளடக்கிய வளைகுடா பகுதி தான், உலகின் எண்ணெய் உற்பத்தியில் 31 சதவீதத்தையும், உலக எரிவாயு உற்பத்தியில் 8 முதல் 17 சதவீதத்தையும் வழங்குகிறது. ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டால் எண்ணெய் விநியோகப் பாதிப்பு ஏற்பட்டு, உலகெங்கும் எரிசக்தி நெருக்கடி உருவாகியுள்ளது. இது எப்போது சீராகும் எனத் தெளிவாகத் தெரியாததால் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துவிட்டது.
பதிலடி
மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாகவே ஈரான் தனது அண்டை நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த புதன்கிழமை, கத்தாரின் LNG மையமான ராஸ் லஃபான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கணிசமான அளவுக்குச் சேதம் ஏற்பட்டு இருந்தது.
அதே புதன்கிழமை, ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டது. இருப்பினும், அதை இடைமறித்து அழித்ததாகச் சவுதி அரேபியா அறிவித்தது. இதுபோல ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் சவுதியைப் போலவே ஐக்கிய அமீரகமும் இப்போது ஒரு ட்ரோன் இடைமறிப்பை சிஸ்டத்தை நிலைநிறுத்தியுள்ளது.
எச்சரிக்கும் சவுதி
ஈரான் பதிலடி கொடுத்தாலும் பொறுமையாக இருக்கும் இதர வளைகுடா நாடுகள் எப்போது வேண்டும் என்றாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழலே இருக்கிறது. சமீபத்தில் சவுதி கூட ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தங்களுக்கு உரிமை உண்டு என்றும் ஈரான் மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டது என்றும் எச்சரித்தது. சமீப காலங்களில் ஈரானுக்கு எதிராகச் சவுதி இதுபோல எச்சரித்துள்ளது இதுவே முதல்முறை. இதனால் இது பிராந்திய போராக வெடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
உச்சக்கட்ட பரபரப்பில் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்க தலைகள் லிஸ்ட் ரெடி.. யாரெல்லாம் வராங்க? -
ஈரான் ஆடிய ஆட்டம்.. சவுதி அரேபியாவின் மோசமான நிலை.. போர் முடிந்த பின் வெளியான உண்மை! -
வெடித்தது பூகம்பம்.. ஈரான் அடுக்கிய 3 மெகா குற்றச்சாட்டு.. அமெரிக்காவின் அடுத்த ஆக்ஷன் என்ன? -
10 நிமிடத்தில் 100 ஏவுகணைகள்! அடங்க மறுக்கும் இஸ்ரேல்.. லெபனான் மீது கொடூர தாக்குதல்! மீண்டும் போர்? -
கண்கள் சிவந்த பிபி.. "டிரம்ப் இப்படி பண்ணிட்டாரு.." கடும் கோபத்தில் நெதன்யாகு.. என்ன நடந்தது? -
Trump: எல்லாரும் ரெடியா இருங்க.. அடுத்த அட்டாக் பலமா இருக்கணும்.. ஈரானுக்கு எதிராக புது அறிவிப்பு! -
ஈரான் உடன் ஒட்டி உறவாடும் டிரம்ப்.. வரி, வர்த்தக தடை டீலிங் போய்கிட்டு இருக்கு! -
டிரம்ப்-ன் அடுத்த டார்கெட்.. மீண்டும் கிரீன்லாந்து.. NATO நாடுகளை மிரட்டும் அமெரிக்கா! -
காபி பேஸ்ட் பாகிஸ்தான்.. அமெரிக்கா சொன்னதை அப்படியே திரும்ப சொன்ன ஷெரீப்? வெடித்த சர்ச்சை -
போர் நிறுத்தத்திற்கு காரணம் பாகிஸ்தானா? வெளியான முக்கிய தகவல்.. உள்ளே புகுந்து விளையாடிய சீனா! -
தங்கம், வெள்ளி விலையில் தடாலடி உயர்வு.. அப்போ சென்னை மார்கெட்டில் 'தீபாவளி பரிசு' உண்டு! -
ஈரானில் விழுந்த அமெரிக்க விமானி! இதய துடிப்பை வைத்து பிடித்த US.. CIAன் 'கோஸ்ட் மெர்மெர்' வேட்டை












Click it and Unblock the Notifications