மெக்காவை தாக்க பிளான்.. பறந்து சென்ற ஹவுதிகளின் ட்ரோன்.. வானிலேயே சவுதி செய்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவுதி அரேபியா மற்றும் ஏமன் ஹவுதிகள் இடையே மோதல் வலுத்துள்ளது. இந்நிலையில் தான் இஸ்லாமியர்களின் புனித நகரமான சவுதி அரேபியாவின் மெக்காவை தாக்க ஹவுதிகள் பிளான் போட்டுள்ளனர். இந்நிலையில் தான் மெக்காவை தாக்க பறந்து சென்ற ட்ரோனை, சவுதி அரேபியா வானிலேயே இடைமறித்து தாக்கி அழித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

saudi-arabia-intercepted-and-downs-houthi-drones-near-mecca

ஈரான் - அமெரிக்கா இடையேயான போரின் நீட்சியாக தற்போது சவுதி அரேபியா - ஹவுதிகள் இடையே மோதல் வெடித்துள்ளது. ஹவுதிகள் என்பவர்கள் ஏமனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கிளர்ச்சி படையாகும். இந்த படை ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் நீண்டகாலமாக சவுதி அரேபியா - ஹவுதிகள் இடையே மோதல் இருந்து வந்தது. தற்போது இந்த மோதல் அதிகரித்துள்ளது. சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் போக்குவரத்தை தடுக்கும் பணியில் ஹவுதிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

செங்கடல் வழிப்பாதையை கைப்பற்றி ஹவுதிகள் அடுத்ததாக பாப் எல் மண்டேப் ஜலசந்தியையும் கைப்பற்றி சவுதி அரேபியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி சவுதி அரேபியாவை தாக்க ஹவுதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் ஹவுதிகள் மெக்காவை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதாவது மெக்காவின் தெற்கு பகுதியில் ஹவுதிகளின் ட்ரோன் பறந்து வருவதை சவுதி அரேபியாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு வானிலேயே இடைமறித்து அழித்துள்ளது. இதனால் சவுதி அரேபியாவிற்கு எந்த சேதமும் ஏற்படவல்லை.

இதனை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. ஏமனின் அதிகாரப்பூர்வ அரசின் ராணுவத்துடன் சேர்ந்து செயல்பட்டு வரும் சவுதி அரேபியா படையின் செய்தி தொடர்பாளர் துர்கி அல் மல்கி இதனை உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''ஈரான் ஆதரவில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் சவுதி அரேபியாவை நீண்ட போரை நோக்கி இழுக்க முயற்சிக்கின்றர். மெக்கா என்பது இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாகும். ஹஜ் பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இப்படி மெக்காவை ஹவுதிகள் குறிவைத்து தாக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் ஹவு்திகள் பாலிஸ்டிக் ஏவுகணையை மெக்கா நகரை நோக்கி ஏவியிருந்தனர். தற்போது ட்ரோனை ஏவி தாக்க முயன்றுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. னால் இந்த குற்றச்சாட்டை ஹவுதிகள் மறுத்துள்ளனர். இஸ்லாமியர்களின் புனித நகராக இருக்கும் மெக்காவை நாங்கள் ஒருபோதும் குறிவைக்கவில்லை என்று ஹவுதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது சவுதி அரேபியா - ஏமன் ஹவுதிகள் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+