6 ஆண்டுகளில் இல்லாத சரிவு.. கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்த சவுதி.. இந்தியாவுக்கு லாபம்!

Subscribe to Oneindia Tamil

ரியாத்: ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விற்பனை விலையை சவுதி அரேபியா எதிர்பாராத வகையில் குறைத்துள்ளது. நவம்பர் மாதத்திற்கான விலை கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வடமேற்கு ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கான விலையை சவுதி உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் தங்கள் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய, பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்தே கச்சா எண்ணெய்யை வாங்கும். அதில் சவுதி முக்கிய சப்ளையராக இருக்கிறது. இந்தியா கூட தனது தேவையில் கிட்டத்தட்ட 13%ஐ சவுதியிடம் இருந்தே வாங்குகிறது. இதற்கிடையே நவம்பர் மாதத்திற்கான விற்பனை விலை குறித்த அறிவிப்பை சவுதி வெளியிட்டுள்ளது.

Saudi Arabia

விலை குறைவு

சவுதி அராம்கோ இது தொடர்பாக அறிவித்துள்ளது.. அதில் ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் அரப் லைட் கச்சா எண்ணெய்யின் நவம்பர் மாத விலை பெரியளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஓமன் மற்றும் துபாய் கச்சா எண்ணெய் விலைகளின் சராசரியை விட ஒரு பேரலுக்கு 5 டாலர் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 3 டாலர் குறைவு. 2020 ஜூன் மாதத்துக்கு பிறகு, அதாவது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.

முதலில் நவம்பர் மாதத்திற்கான விற்பனை விலை ஒரு பேரலுக்கு 5 டாலர் வரை உயர்த்தப்படலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது. பிற மத்திய கிழக்கு நாடுகளின் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்த நிலையில், சவுதியும் உயர்த்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் எண்ணெய் விலையை குறைத்து சவுதி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. ஆசியாவுக்கு விற்பனை செய்யப்படும் அதிக அடர்த்தி கொண்ட அரப் மீடியம் மற்றும் அரப் ஹெவி ரகங்களின் விலையையும் சவுதி அராம்கோ ஒரு பேரலுக்கு 5 டாலர் குறைத்துள்ளது.

காரணம்

கச்சா எண்ணெய் கொண்டு செல்ல கப்பல் போக்குவரத்து செலவு அதிகரித்திருப்பதே இந்த விலை குறைப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வளைகுடா பகுதியில் இருந்து சீனாவுக்கு சுமார் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை எடுத்து செல்லும் மிக பெரிய எண்ணெய் கப்பலை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுப்பதற்கான கட்டணம் 12 லட்சம் டாலராக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த கட்டணம் சுமார் 80,000 டாலராக இருந்தது.

இந்தளவுக்கு விலை ஏறிவிட்டதால் கச்சா எண்ணெய் வாங்குபவர்களுக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. இதனால் மத்திய கிழக்கை தவிர்த்துவிட்டு, மற்ற நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கவும் பலரும் முயல்கிறார்கள். இதை ஈடுகட்டும் வகையிலேயே சவுதி கச்சா எண்ணெய்யின் விலையை குறைத்திருக்கலாம் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சவுதி எண்ணெயை எகிப்தின் சிடி கெரிர் துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கப்பல்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நீண்ட பயண நேரத்தால் ஏற்படும் கூடுதல் செலவையும் இந்த விலை குறைப்பு ஓரளவு ஈடுகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி நடவடிக்கை

கடந்த செப்டம்பர் மாதம் முதல் சவுதி அராம்கோ ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே கப்பல்களுக்கு இடையிலான எண்ணெய் பரிமாற்றம் மூலம் பல மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்து வருகிறது. இதன் காரணமாக ஹார்முஸ் முடக்கத்தை தாண்டியும் சவுதி எண்ணெய் விற்பனை மோதலுக்கு முந்தைய நிலைக்கு திரும்பியுள்ளது. அதேபோல ஹவுதியின் தாக்குதல்களால் சவுதியின் எண்ணெய் குழாய் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அதுவும் சரி செய்யப்பட்டு செங்கடல் பகுதியில் உள்ள யான்பு துறைமுகத்திலும் மீண்டும் எண்ணெய் ஏற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.

விலை உயர்வு

அதேநேரம் சவுதி கச்சா எண்ணெய் விலையை அனைத்து நாடுகளுக்கும் குறைக்கவில்லை.. ஆசியாவுக்கான விலையை குறைத்துள்ள சவுதி அராம்கோ, வடமேற்கு ஐரோப்பாவுக்கான நவம்பர் மாத கச்சா எண்ணெய் விற்பனை விலையை அனைத்து ரகங்களிலும் ஒரு பேரலுக்கு 3 டாலர் உயர்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான நவம்பர் மாத விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+