Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவுதியில் மது விற்பனைக்கு அனுமதி! வெளிநாட்டினர் மதுக்களை வாங்கலாம்.. ஆனா ஒரே ஒரு மேஜர் கண்டிஷன்

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவுதியில் கடந்த பல ஆண்டுகளாகவே பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே சவுதி இப்போது திடீரெனத் தனது கொள்கையில் ஒரு மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி சவுதியில் வசிக்கும் வெளிநாட்டினர், இனி அங்கு மதுபானத்தை வாங்கலாம். இதற்காக சவுதி தலைநகரில் ஒரு மதுபானக் கடையும் இருக்கிறது.

பெரும்பாலான அரபு நாடுகளில் பூரண மது விலக்கு இருக்கும். இஸ்லாமிய மத நம்பிக்கையின்படி மது குடிக்கக் கூடாது என்பதால் பல அரபு நாடுகளில் மது விலக்கு இருக்கும். ஆனால், இப்போது உலக பொருளாதாரமும் சர்வதேச பொருளாதாரமும் மாறி வரும் சூழலில், இந்தக் கொள்கையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

Saudi Arabia Sells Alcohol to Expats High Salary Catch at Liquor Stores a major policy Reform

சவுதி அரேபியா

மதுவுக்கு அனுமதி இல்லாத நாடுகளில் ஒன்று தான் சவுதி அரேபியா. முஸ்லீம் நாடான சவுதியில் பல காலமாகவே மது விற்பனைக்கு அனுமதி கிடையாது. இதற்கிடையே மது விற்பனை தொடர்பான விதிகளில் சவுதி அரசு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. தனது மதுபான விற்பனைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.

ஒரே கண்டிஷன்

அங்கு மது விற்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்துத் தரப்பினருக்கும் அனுமதி இல்லை. அங்கு வசிக்கும் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு வாழ் மக்களுக்காக மட்டுமே இந்த அனுமதி தரப்பட்டுள்ளது. முஸ்லீம் மதத்தைப் பின்பற்றாத வெளிநாட்டினரின் மாத வருமானம் சுமார் $13,300 (சுமார் ₹12 லட்சம்) இருந்தால் அவர்கள் மது வாங்க முடியுமாம். இதற்காகத் தலைநகர் ரியாத்தில் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. சவுதியில் திறக்கப்பட்ட ஒரே மதுபானக் கடை இதுவாகும்.

பல மாற்றங்கள்

இஸ்லாமிய நாடான சவுதியில் ஏற்பட்டுள்ள ஒரு மிக முக்கியமான கொள்கை மாற்றம் இதுவாகும். முஸ்லீம்கள் தங்கள் மத நம்பிக்கையின்படி மதுபானத்தைத் தவிர்க்கிறார்கள். மேலும், இஸ்லாம் மதத்தின் இரண்டு புனிதத் தலங்களும் சவுதி அரேபியாவில் தான் அமைந்துள்ளன. இதன் காரணமாகவே அங்கு மதுவுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், கடந்த தில காலமாகவே சவுதி பல பழமைவாத கருத்துகளைத் திரும்பப் பெற்று வருகிறது. பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை கூட சமீபத்தில் தான் வாபஸ் பெறப்பட்டது. இந்தச் சூழலில் தான் மதுவுக்கும் சவுதி அனுமதி கொடுத்துள்ளது.

சவுதி பொருளாதாரம் முழுக்க முழுக்க கச்சா எண்ணெய்யை மட்டும் நம்பி இருக்கிறது. ஆனால், அந்த நிலையை மாற்றி பொருளாதாரத்தை பலதரப்படுத்த முயற்சியில் சவுதி இறங்கியுள்ளது. இதற்காக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 'விஷன் 2030' என்ற திட்டத்தையும் அறிவித்திருந்தார். இதன் மூலம் சவுதியை ஒரு சர்வதேச பொருளாதார மையமாக மாற்ற வேண்டும் என்பதே அவரது திட்டம். இதன் காரணமாகவே அங்கு மதுவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

4.8 மடங்கு அதிகம்

கடந்த ஆண்டு சவுதியில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத தூதரக அதிகாரிகளுக்காக மட்டும் அங்கு ஒரு மதுபானக் கடையைத் திறக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் அங்கு வசிக்கும் வெளிநாட்டு மக்களும் மது வாங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மது வாங்குவதற்கு, வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் வருமானத்தை நிரூபிக்க வேண்டும். இதற்காக மதுக் கடையில் தங்கள் சம்பளச் சான்றிதழைக் கட்டாயம் காட்ட வேண்டுமாம். சவுதியில் இப்போது சராசரி மாதச் சம்பளமாக $2,750 (₹2,47,336) இருக்கிறது. அதாவது சராசரி சம்பளத்தை விட 4.83 மடங்கு அதிகம் சம்பாதிப்பவர்கள் மட்டுமே அங்கு மது வாங்க முடியும்!

பின்னணி

கடந்த 1952ஆம் ஆண்டில், மன்னர் அப்துல்அஜிஸின் மகன் ஒரு பிரிட்டிஷ் தூதரைப் போதையில் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்குப் பிறகே, சவுதி அரேபியாவில் கடுமையான மதுவிலக்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், இப்போது அதில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இப்போது ரியாத்தில் மட்டுமே மது கடை இருக்கும் நிலையில், ஜெட்டா, தஹ்ரான் நகரங்களிலும் புதிய கடைகள் திறக்கப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+