சேலத்தில் ஷாக்.. தரதரவென கணவனை இழுத்துச் சென்ற பஸ்.. பதறி அடித்து பின்னாடியே ஓடிய மனைவி!
சேலம்: சேலத்தில் மனைவியுடன் பைக்கில் வந்தபோது தனியார் பேருந்தி மோது, அதன் அடியில் சிக்கி ஒரு கிலோமீட்டர் தூரம் கம்பியில் தொங்கி வந்த ஊழியர் உயிர் பிழைத்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சேலம் கொண்டலாம்பட்டி ஆர்.ஆர்.பேர்லேண்ட்ஸ் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் (43). இவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சத்யா (40), இவர் சேலம் குள்ளமுடையானூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார்.

இருசக்கர வாகனம்
கார்த்திக், சத்யா தம்பதி நேற்று வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில், சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றனர். திருவாகவுண்டனூர் பை-பாஸ் திருப்பத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது, மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது. அந்த பகுதியை கடந்தபோது, பின்னால் கரூரில் இருந்து சேலம் வந்த தனியார் பேருந்தும் கடந்தது.

பஸ்ஸில் சிக்கினார்
அவர்களை பாதியளவு பேருந்து கடந்துசென்றநிலையில், பின்பகுதி கடந்தபோது பேருந்தின் மீது லேசாக உரசிச் சென்றது. இதில், பைக்கில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். வலது புறம் சரிந்த கார்த்திக், பஸ்சின் அடியில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக சக்கரத்தில் சிக்காமல், நடுப்பகுதியில் இரண்டு சக்கரத்திற்கு இணைப்பாக இருக்கும் கம்பியில், கார்த்திக் தொங்கிக் கொண்டார்.

பஸ்ஸை நிறுத்தினர்
இதை அறியாத கரூரைச் சேர்ந்த தனியார் பேருந்தின் டிரைவர் வெங்கடேஷ்,, பேருந்து தொடர்ந்து ஓட்டிச் சென்றார். சித்ரா கூச்சலிடவே, பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பஸ்சை விரட்டி சென்றார்கள். சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் கடந்தநிலையில் 3 ரோடு பகுதியில் பஸ்சை நிறுத்தி விவரத்தை தெரிவித்தார்கள்.

தீவிர சிகிச்சை
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் வெங்கடேஷ், பஸ்சை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினார். அதன் பின்னர் பேருந்தன் அடியில் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கை மீட்டனர். காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நேற்று சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications