மண்டமேல இருந்த கொண்டைய மறந்த ஓபிஎஸ்.. கேட்ல இருந்த இரட்டை இலைய எடுத்தீங்களே! வீடு? விளாசிய விந்தியா!
சேலம்: அதிமுகவின் அனைத்து வளங்களையும் அனுபவித்த ஓபிஎஸ் தற்போது கலைஞர், தளபதி, குட்டி தளபதி, குட்டி குட்டி தளபதி என்று கூறுகிறார் எனவும், காரில் இருந்த ஜெயலலிதா புகைப்படத்தை எடுத்து விட்டார்.. கேட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தை வெட்டி எடுத்துட்டார்,ஆனால் அவருடைய கார், அவர் வீடு இதெல்லாம் எங்கிருந்து வந்தது..? என நடிகையும் அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளருமான விந்தியா கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய அவர்," சொல்லாததையும் தமிழக மக்களுக்காக ஜெயலலிதா செய்தார். நமது உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவறு செய்ய பயந்தார்கள். ஒரே ஒரு நாடாளுமன்ற சீட்டுக்காக அடிமையாக இருக்கின்ற திருமாவளவன் உட்பட எந்த ஜாதி கட்சி தலைவர்களும் செய்ததை, இடஒதுக்கீட்டை சட்டமாக செயல்படுத்தியவர் ஜெயலலிதா..
கனிமொழியை மட்டும் முன்னிறுத்திவிட்டு திமுக ஆட்சியில் பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்று விளம்பரம் கொடுக்கிறார்கள்.முதலில் அதிமுகவில் இருந்த துரோகிகளை ஒழித்து கட்டினார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த துரோகிகள், துரோகிகள் என்று தெரிந்து கொண்டு எவ்வாறு வைத்துக்கொள்ள முடியும்.

நடிகை விந்தியா
துரோகிகள் திமுகவுடன் கை கோர்த்துக்கொண்டு அதிமுக கட்சி அலுவலகத்திற்கு சென்று சேதப்படுத்தினார்கள். அதிமுகவை துரோகிகள் ஒழிக்க பார்த்தார்கள்; ஆனால் அசராமல் கட்சியை எடப்பாடி பழனிச்சாமி காப்பாற்றினார்கள். துரோகிகள் சண்டையில் தோற்ற உடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார், எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்து கொண்டு பொறுமையாக காத்திருந்தார். இப்பொழுது தமிழகத்தை மக்களுக்கு தெரிந்து விட்டது ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் திமுகவின் கைக்கூலிகள்.
எடப்பாடி பழனிசாமி
இவர்களின் உண்மையான நிறம் என்ன என்று தமிழக மக்களுக்கு தெரிந்துவிட்டது. அதிமுகவின் நடைபெற்றது கட்டிக்கொண்டு திமுகவிற்கு வேலை பார்த்திருப்பவர்கள். பெரிய ஆபத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமி தான் காப்பாற்றினார்கள். எதிரி திமுகவுடன் எவ்வாறு ஓபிஎஸ் சென்றுவிட்டார். இதனை மக்கள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள். வேண்டாம் என்று ஒழித்துக் கட்டிய கோமாளிகளை திமுக கொண்டு சென்றுள்ளார்கள். ஓபிஎஸ் செய்த தவறுகளை மறைப்பதற்கும் எடப்பாடி பழனிச்சாமியை தவறு கூறுகிறார்.
ஜெயலலிதா
அதிமுகவின் அனைத்து வளங்களையும் அனுபவித்த ஓபிஎஸ் தற்போது கலைஞர், தளபதி, குட்டி தளபதி, குட்டி குட்டி தளபதி என்று கூறுகிறார். காரில் இருந்த ஜெயலலிதா புகைப்படத்தை எடுத்து விட்டார்.. கேட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தை வெட்டி எடுத்துட்டார்,ஆனால் அவருடைய கார், அவர் வீடு இதெல்லாம் எங்கிருந்து வந்தது..? மக்கள் நீதி மய்யம் கமலஹாசன் கட்சி ஆரம்பித்துவிட்டு தேர்தல் நேரத்தில் கேட் வாசலில் அமர்ந்திருந்தார். கமல்ஹாசன் கால் வைத்ததிலிருந்து முதல்வர் ஸ்டாலினுக்கும் அதேநிலை தான் ... அறிவாலயத்திற்கு வாசலுக்கு சென்றால் இரண்டு சீட்டுகள் கொடுத்து விடுகிறார்கள்.
ஓபிஎஸ் மீது விமர்சனம்
அண்ணா அறிவாலயம் பயத்தில் உள்ளது. ஐந்து ஆண்டுகள் நல்ல ஆட்சி நடத்தியிருந்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு ஏன் இந்த நிலை. திமுக தலைவர் சரியில்லை கட்சிக்கு புதிதாக வந்தவர்களும் சரி இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் புலம்புகிறார். தமிழக மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்தால் திமுகவை தள்ளுபடி செய்வோம்.
எங்கு பார்த்தாலும் திமுக ஆட்சியில் ஊழல் ஊழல் என்று இருப்பதால் மக்களை பார்க்க சோர்வடைந்துவிட்டார்கள்..
பிரேமலதா
திருவிழா நேரம் வந்தால் ஊர் ஊராக சென்று கடை வைப்பவர்கள்; அதேபோன்று தேர்தல் திருவிழா வந்தால் பிரேமலதா பேரம் பேச ஆரம்பித்துவிடுவார். ரஜினி திரைப்படத்தில் வருவது போன்று அரை சதவீதம் கூட, ஓட்டு இல்லாத கட்சியை, விலை கொடுத்து வாங்கி விட்டால் ஸ்டாலின்.. சீட்டு கொடுத்து வாங்கியுள்ளார் என்று கூறினேன். பிரேமலதாவிற்கு பெரிய கொள்கை எல்லாம் கிடையாது, அண்ணியாருக்கு ஓட்டு, மச்சானுக்கு சீட்டு. இதையெல்லாம் பார்க்காமல் சீக்கிரமாக விஜயகாந்த் இறந்துவிட்டார். நல்லவர்கள் இறந்து விடுவார்கள்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications