எடப்பாடியின் சொந்த மண்ணிலேயே கட்சிக்குள் பூகம்பம்.. அதிமுக ஒன்றிய செயலாளர் நீக்கம் ஏன்? பரபர பின்னணி
சேலம்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு என்பவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரது நீக்கத்திற்கான காரணம், அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூவை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் சேலம் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடியில் இருப்பதாகவும், அதிகளவில் சொத்து குவித்து உள்ளதாகவும் அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருந்தார். இந்த விவகாரம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவான வெங்கடாசலம், தீவிரமான எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர். இவர் கடந்த அதிமுக ஆட்சியின் போது சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது அதிமுக தலைமை வரை அதிர வைத்தது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சேலம் புது ரோடு பகுதியில் ஹோட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்த வெங்கடாசலம் தற்போது 300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். அவரது வீடு மட்டும் 10 கோடி ரூபாய் வரை இருக்கும். இது தவிர சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கரூர் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொத்து உள்ளது என ஏவி ராஜூ தெரிவித்திருந்தார்.

மேலும் கடந்த அதிமுக ஆட்சியின் போது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் மட்டுமல்லாமல், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பலரிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், தனக்கு மட்டும் பல லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும் இதேபோன்று பலரிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.
அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக, வெங்கடாசலம் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் தெரிவித்தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார் அதிமுக ஒன்றிய செயலாளர் ஏவி ராஜூ. மேலும், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ள அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்காட்சலம் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும் எழுப்பினார்.

வெங்கடாசலம் அதிமுக சேலம் மாவட்டச் செயலாளர் பதவியில் நீடித்தால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் அதிமுகவிற்கு குறையும். எனவே பதவியிலிருந்து வெங்கடாசலத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஏவி ராஜூ தெரிவித்தார்.
அதிமுக ஒன்றிய செயலாளர் ஏவி ராஜூ தெரிவித்த பரபரப்பு குற்றச்சாட்டுகள் அதிமுக வட்டாரத்தில் அனலைக் கிளப்பியது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான மா.செ வெங்கடாசலம் மீது சொந்தக் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளரே முறைகேடாக சொத்துகளைக் குவித்ததாக குற்றம்சாட்டிய நிலையில் தான், அதிர்ந்து போன அதிமுக தலைமை, ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜுவை கட்சியை விட்டு நீக்கியுள்ளது.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications