நீளும் கேள்விகள்.. ஜெயலலிதா உடலுக்கு எம்பாமிங் செய்தது யார்?.. ஆறுமுகசாமி அளித்த பரபரப்பு பதில்
சேலம் : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எம்பாமிங் செய்தது எப்படி என்ற கேள்விக்கு ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி பதில் அளித்துள்ளார்.
சேலம் கருமந்துறையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வழக்கறிஞர் தமிழ்மணி, ஆறுமுகசாமியிடம் சில கேள்விகளை எழுப்பினார். அதன்படி தமிழ்மணி பேசுகையில் நான் கேட்கும் கேள்வி உங்கள் தீர்ப்பில் இருக்கிறது. அதை மக்களுக்கு உங்கள் வாயால் தெளிவுப்படுத்தி விடுங்கள் என்றார்.
ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தும் வேலையை ஒரு டாக்டர் செய்யவில்லை, நர்ஸ் செய்யவில்லை. அவருடைய உடலை மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கூடத்தில் உபகரணங்களை சுத்தம் செய்யும் நபர்கள்தான் பதப்படுத்தினார்கள் என்று உங்கள் அறிக்கையில் இருக்கிறது.

சென்சிட்டிவான விஷயம்
கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் என தமிழ்மணி கேள்விஎழுப்பினார். இதற்கு ஆறுமுகசாமி பதிலளிக்கையில் இது சென்சிட்டிவான விஷயம். இதுகுறித்து அந்த அறிக்கையில் நான் நிறைய எழுதியுள்ளேன். என்னுடைய அறிக்கையில் அவர்கள் சாட்சியம் அளித்ததை வைத்துதான் சொன்னேன். இன்னும் சொல்ல போனால் நான் எதையுமே அதிகமாக எழுதவில்லை.

ஜெயலலிதா
காரணம் இது மருத்துவம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. நான் எனது கருத்து என எதையும் சொல்லவில்லை. நீங்கள் கூறியதில் திருத்தம் உள்ளது. அதாவது ஜெயலலிதாவை சிபிஆர் செய்தது மருத்துவரோ நர்ஸோ இல்லை, அறுவை சிகிச்சை அறையில் பணியாற்றும் நபர்கள்தான். எம்பார்மிங் செய்ய கடிதம் கொடுத்தது இன்னொருவர். அவர் யார் என நான் சொல்ல முடியாது. எய்ம்ஸ் மருத்துவ ஆணையத்தை தவிர வேறு யாருக்குமே தனியாக கருத்து சொல்ல முடியாது.

பதிலளிக்க மறுத்துவிட்டார்
அறிக்கையில் உள்ளதை நான் மீண்டும் சொன்னால் நன்றாக இருக்காது என்றார். மேலும் "தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகனராவ், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல அமைச்சரவையில் அனுமதி கேட்டு 4 நாட்களாகியும் பதில் வரவில்லை என கூறியிருந்தாரே, அதில் நீங்கள் ஏதேனும் இணைக்க விரும்புகிறீர்களா" என தமிழ்மணி கேட்டார். அதற்கு ஆறுமுகசாமி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

எம்பாமிங்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது. அந்த விசாரணை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா மரணித்தது கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி என்ற தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் ஜெயலலிதாவுக்கு 4 ஆம் தேதி மாரடைப்பு வந்த போது அவருக்கு சிபிஆர் சிகிச்சை செய்தது மருத்துவரோ செவிலியரோ இல்லை என்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை சுத்தம் செய்யும் நபர் என்பதும் தெரியவந்தது. அது போல் ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் ஏதும் வழங்கப்படவில்லை என ஆணைய விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும் அதற்கு அப்போதைய சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், வெளிநாட்டுக்கு அழைத்து சென்றால் உள்நாட்டு மருத்துவர்களை அசிங்கப்படுத்தும் செயல் என்பதால் அழைத்து செல்லவில்லை என விசாரணை அறிக்கையில் கூறியிருந்ததை ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.
-
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
பென்னாகரத்தில் ஒரே சத்தம்.. சூத்திரதாரி திமுக தானே மணி.. ராமதாஸின் பிளானையே ஓவர்டேக் செய்தாச்சா -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி












Click it and Unblock the Notifications