சி.எம்.சார் ப்ளீஸ்.. ஒன்ஸ் மோர்! அவர்களை விடுங்க மலர் தூவட்டும்! மேட்டுர் அணையில் நிகழ்ந்த ருசிகரம்!
சேலம்: தமிழக வரலாற்றில் முதல்முறையாக குறுவை சாகுபடிக்காக மே மாதமே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட வந்த முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கத்தை காட்டிலும் அதிக மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டார்.
காரணம் இப்படியொரு கோடைக்காலத்தில் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு இயற்கையும் அரசுக்கு ஒத்துழைப்பு தந்தது தான்.

ஸ்டாலின் பூரிப்பு
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிட்டார். ஷட்டர்களை ஓபன் செய்வதற்கான மின் மோட்டார் பட்டனை ஸ்டாலின் அழுத்தியவுடன் மதகுகள் வழியே தண்ணீர் சீறிப்பாய்ந்தது. காண்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருந்த அதனை முதலமைச்சர் ஸ்டாலின் சில நொடிகள் வைத்த கண் வாங்காமல் ரசித்துப் பார்த்தார். தண்ணீர் ஆர்ப்பரித்து சீறியதைக் கண்ட முதலமைச்சர் ஸ்டாலினின் முகமெல்லாம் பூரிப்பு.

மகிழ்ச்சி -உற்சாகம்
இருக்காத பின்னே, ஜூன் 12-ம் தேதி தான் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதுவும் அதிமுக ஆட்சிக்காலத்தில் சில வருடங்கள் ஜூன் 12-க்கு பதில் தேதி தள்ளிவைக்கப்பட்டு அணை திறக்கப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நடந்ததுண்டு. இப்படிப்பட்டி சூழலில் வாட்டி வதைக்கும் வெயில்காலத்திலும் கூட மேட்டூர் அணை செழிப்புடன் இருப்பதும் வரலாற்றில் முதல்முறையாக மே மாதமே தண்ணீர் திறந்துவிடுவதும் முதலவருக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்திருந்தது.

ஒன்ஸ் மோர்
இதனிடையே ஷட்டர்களில் இருந்து பாய்ந்தோடிய தண்ணீருக்கு மலர் தூவினார் முதல்வர் ஸ்டாலின். அதனை படம்பிடிக்கத் தவறிய செய்தியாளர்கள் சி.எம். சார் ப்ளீஸ் சார், ஒன்ஸ்மோர் என கோரஸாக குரல் எழுப்பினர். ஒன்ஸ்மோர் என்ன டிரிப்ளிஸ் மோரே தருகிறேன் என்கிற வகையில் தட்டு நிறைய இருந்த மலர்களையும், தானியங்களையும் தனது கரங்களால் மீண்டும் மீண்டும் தூவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

வழி விடுங்க
மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் அமைச்சர்கள் நேரு, துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்த்திபன் செந்தில்குமார் ஆகியோருக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களையும் முதலமைச்சரின் கண் தேடியது.
திரும்பிப்பார்த்து விவசாய சங்கப் பிரதிநிதிகளை முன்னால் வருமாறு அழைத்து அவர்களையும் மலர் தூவக் கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications