சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேணும்னே குதர்க்கமா கேட்காதீங்க.. கூட்டணி வேறு.. கொள்கை வேறு... எடப்பாடி டென்ஷன்

Google Oneindia Tamil News

Recommended Video

    கூட்டணி வேறு.. கொள்கை வேறு... டென்ஷன் ஆன முதல்வர்

    சேலம்:பாமகவுடன் நாங்கள் மட்டுமா கூட்டணி வைத்திருந்தோம்... கடந்த காலங்களில் திமுகவும் தான் கூட்டணி வைத்திருந்தது.. அதனால கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

    சேலம் போஸ் மைதானத்தில் நேரு கலையரங்கில் நடைபெற்ற விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 35 திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் 34 புதிய கட்டுமான பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினர்.

    தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 20 லட்சம் மதிப்பிலான புதிய வாகனங்களின் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார். இறுதியாக பல்வேறு துறைகளின் சார்பில், 43,274 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழா மேடையில் பேச்சு

    விழா மேடையில் பேச்சு

    நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி. பன்னீர்செல்வம், ஆட்சியர் ரோகிணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் விழா மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

    நன்றி தெரிவிக்கும் மக்கள்

    நன்றி தெரிவிக்கும் மக்கள்

    தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் உரிய முறையில் நன்றியை தெரிவிப்பார்கள். தமிழகத்திலேயே முதன் முறையாக சேலத்தில் தான் இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.

    முதல்வர் பேட்டி

    முதல்வர் பேட்டி

    பின்னர் செய்தியாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு. தேமுதிக உட்பட பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    திமுகவுடன் கூட்டணி

    திமுகவுடன் கூட்டணி

    பாமகவுடன் நாங்கள் மட்டுமா கூட்டணி வைத்திருக்கிறோம். கடந்த காலங்களில் திமுகவே அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளது.

    எந்த சம்பந்தமும் இல்லை

    எந்த சம்பந்தமும் இல்லை

    தேர்தல் நேரங்களில் கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில்தான் கூட்டணி அமைக்கப் படுகிறது. அதற்கும் கொள்கைக்கும், எந்த சம்பந்தமும் இல்லை.

    மழுப்பல் பதில்

    மழுப்பல் பதில்

    அப்போது பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளது நெருடலாக இல்லையா என்று செய்தியாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர்.அதற்கு சும்மா குதர்க்கமாகவே கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்லி லேசாக டென்ஷனாக பேசி.. பின்னர் சிரித்துக் கொண்டே மழுப்பினார்.

    விரைவில் முடிவு

    விரைவில் முடிவு

    தொடர்ந்து அவர் பேசியதாவது:தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அது குறித்து இன்னும் சில நாட்களில் முடிவு எட்டப்படும்.

    அமமுக பெரிய கட்சி

    அமமுக பெரிய கட்சி

    தினகரன் தமிழகத்தில் மட்டுமல்ல... இந்தியாவில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடலாம். அது மிக பெரிய கட்சி இல்லையா.... அதனால் அப்படி போட்டியிடுவதுதான் சிறப்பானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

    English summary
    We only had a coalition with PMK and coalition is different than principal says choef minister Edappadi Palanisamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X