வளைகாப்பு நிகழ்ச்சி.. வந்த மொய் பணத்தை கஜா புயலுக்கு வாரி வழங்கிய தம்பதி.. சேலத்தில் நெகிழ்ச்சி
Recommended Video

சேலம்: சேலத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியில் வந்த மொய் பணத்தை கஜா புயலுக்கு நிவாரணமாக அளித்த தம்பதியினால் சேலத்தில் நெகிழ்ச்சி தருணம் ஏற்பட்டது.
சேலம் பொன்னம்மாபேட்டையை அடுத்த வாய்க்கால்பட்டறையை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி பிரபாவதி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.

நிகழ்ச்சி
இந்நிலையில் தற்போது பிரபாவதி தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதையடுத்து அவருக்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிவாரண நிதி
இதில் கிடைக்கும் மொய் பணத்தை அப்படியே கஜா புயல் நிவாரணத்துக்கு அளிப்பது என தம்பதி முடிவு செய்தனர். அதன்படி மண்டபத்தில் ஒரு பெட்டியை வைத்திருந்தனர். அதில் பிரபாவதி- விஜயன் வளைகாப்பு விழா என எழுதி கஜா புயல் நிவாரண நிதி என எழுதப்பட்டிருந்தது.

புயல் நிவாரணம்
நிகழ்ச்சியில் வசூலான மொய் பணத்தை அந்த பெட்டியில் தம்பதியினர் போட்டனர். இதை பார்த்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இது போல் கஜா புயல் நிவாரணத்துக்கு ஏராளமானோர் நிவாரணம் அளித்து வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்திடம்
பள்ளிக் குழந்தைகள் தாங்கள் சேமித்து வைத்த பணத்தை அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் அளித்து வருகின்றனர். இது போல் கஜா புயல் நிவாரணத்தை மக்கள் வாரி வழங்கி வருவது அப்பகுதி மக்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications