சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எதுக்கு போட்டிப் போடுவதுனு வெவஸ்தை இல்லையா உங்களுக்கு.. அநியாயமா ஒரு உயிர் போச்சே!

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் குடும்பத் தகராறு காரணமாக போட்டி போட்டு கொண்டு மாமியாரும் மருமகளும் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாமியார் உயிரிழந்துவிட்டார்.

பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி- சுந்தரம் தம்பதி. இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் உள்ளார்கள்.

மூத்த மகன் சுரேஷுக்கும் ஆத்தூர் வட்டம் தம்மம்பட்டி அருகே நாவல்பட்டியை சேர்ந்த சரஸ்வதிக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்யப்போவது வசுந்தரா ராஜே? கலங்கடிக்கும் கள நிலவரம் ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்யப்போவது வசுந்தரா ராஜே? கலங்கடிக்கும் கள நிலவரம்

3 மாதங்களுக்கு முன்னர்

3 மாதங்களுக்கு முன்னர்

சரஸ்வதிக்கும் சுரேஷுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சரஸ்வதி கடந்த 4 ஆண்டுகளாக சுரேஷை விட்டு விலகிச் சென்று பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 3 மாதங்களுக்கு முன் சுரேஷுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்.

விஷம்

விஷம்

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாமியார் சாந்திக்கும் சரஸ்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டிக் கொண்டனர். இந்நிலையில் சாந்தி விஷம் குடித்துவிட்டார்.

அச்சமடைந்த மருமகள்

அச்சமடைந்த மருமகள்

அதிகாலை சாந்தி இறந்து கிடந்ததை பார்த்த சரஸ்வதி அக்கம்பக்கத்தில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து காவல் துறையினர் சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாமியார் இறந்ததால் தன் மீது பழி விழுமோ என பயந்த சரஸ்வதி, விஷம் குடித்துள்ளார்.

பரபரப்பு

பரபரப்பு

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Daughter in law and Mother in Law intakes poison after family dispute in Salem. Mother in law dies, another one is gettig treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X