சேலத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
சேலம்: சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், செங்கல் சூளைகள் மற்றும் கோழிப்பண்ணைகள் உள்பட அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும், பணி அமர்த்தப்படும் வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பான விவரங்களை வலைத்தளத்தில் ஒரு மாத காலத்திற்குள் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வணிக நிறுவனங்களுக்கு சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) எல்.திருநந்தன் அறிவுறுத்தியிருக்கிறார்.
இதுதொடர்பாக சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) எல்.திருநந்தன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:"சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், செங்கல் சூளைகள் மற்றும் கோழிப்பண்ணைகள் உள்பட அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும், பணி அமர்த்தப்படும் வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பான விவரங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்களை பெற்றுக்கொள்ளாமல் வேலைக்கு அமர்த்துகின்றனர். இதனால் அந்த தொழிலாளர்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் அவர்களை பற்றிய முழு விவரங்களை அறிய முடியவில்லை. மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதிலும் தடை ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு சென்னை தொழிலாளர் ஆணையர் மற்றும் சேலம் மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், செங்கல் சூளைகள் மற்றும் கோழிப்பண்ணைகள் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் புலம் பெயர் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் போது, அவர்களின் அடையாள அட்டை தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்டு பணி அமர்த்த வேண்டும். இந்த விவரங்களை தொழிலாளர் துறை வலைத்தளமான http://labour.tn.gov.in/ism/-ல் பதிவேற்றம் செய்த பின்னர் அவர்களை பணி அமர்த்த வேண்டும்.
மேலும் தற்போது பணிபுரிந்து வரும் அனைத்து வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களையும் எந்தவித விடுதலும் இன்றி முழுமையாக தற்போது முதல் ஒரு மாத காலத்திற்குள் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யாத உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே சட்ட நடவடிக்ககைளை தவிர்க்கும் பொருட்டு அனைத்து வெளிமாநில தொழிலாளர்களையும் வலைத்தளத்தில் பதிவு செய்திட வேண்டும்.
மேலும் அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த விவரத்தை சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
தொழிலாளர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ஆத்தூா், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய தாலுகாக்களை சேர்ந்தவர்கள் ஆத்தூர் தொழிலாளர் உதவி ஆய்வர் அலுவலகத்தை அணுகலாம். வாழப்பாடி தாலுகாவில் சேலம் தொழிலாளர் உதவி ஆய்வர் 6-ம் வட்ட அலுவலகத்திலும், மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய தாலுகாக்களை சேர்ந்தவர்கள் மேட்டூர் தொழிலாளர் உதவி ஆய்வர் அலுவலகத்திலும் விவரங்களை கேட்டு பெறலாம்.
சேலம் மாநகராட்சி மற்றும் ஏற்காடு தாலுகாவை சேர்ந்தவர்கள் சேலம் தொழிலாளர் உதவி ஆய்வர் 1 முதல் 4 வட்ட அலுவலங்களிலும், இளம்பிள்ளை, வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய தாலுகாக்களை சேர்ந்தவர்கள் சேலம் தொழிலாளர் உதவி ஆய்வர் 5-ம் வட்ட அலுவலகத்திலும் விவரங்களை கேட்டு பயன்பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications