கே சி பழனிச்சாமியை மீண்டும் அதிமுகவில் சேர்த்தோமா.. நாங்க எப்ப சொன்னோம்.. எடப்பாடி தடாலடி!
Recommended Video

ஓமலூர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமியை அதிமுகவில் இணைத்துக் கொண்டதாக நாங்கள் யாராவது கூறினோமா என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிமுகவின் பதவி விவகாரங்களில் கே.சி. பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார்.

இணைப்பு
இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோரை தலைமை செயலகத்தில் கே சி பழனிச்சாமி சந்தித்து பேசினார். இதையடுத்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் என பேட்டி அளித்தார்.

முன்னாள் எம்பி
இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் முதல்வரை சந்தித்தார் என்றார்.

பழனிச்சாமியை சேர்க்கவில்லை
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கே.சி. பழனிச்சாமி நாங்கள் கட்சியில் சேர்க்கவில்லை. கே சி பழனிச்சாமியை மீண்டும் அதிமுகவில் சேர்த்ததாக நாங்கள் கூறினோமா?

அலுவலகத்தில்
சில கோரிக்கைகள் தொடர்பாகத்தான் என்னை அவர் சந்தித்தார். அதிமுகவில் யாரையாவது சேர்த்தால் கட்சி தலைமை அலுவலகத்தில்தான் அது நடக்கும் என்றார் முதல்வர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications