நேற்று தங்கம்..இன்று வைரம்! நாம் தமிழர் சீமானுக்கு கல்தா கொடுத்த தம்பிகள்..நீளும் லிஸ்ட்! என்னாச்சு?
சேலம்: நேற்று நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக முகநூலில் பதிவிட்ட நிலையில், இன்று நாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணியின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வைரம் கட்சியில் இருந்து விலக்குவதுமாக முகநூலில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களில் மட்டும் நாம் தமிழர் கட்சியில் இருந்து 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகளில் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு தேர்தலை சந்தித்த பிரதான அரசியல் கட்சிகளில் இதுவரை கூட்டணி அமைத்துப் போட்டியிடாத கட்சி என்றால் நாம் தமிழர் கட்சி மட்டும் தான். திமுக - அதிமுக மட்டுமே தங்களுக்குள் கூட்டணி அமைக்காமல், அனைத்து பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன.

இதற்கு தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அப்படி தமிழக இளைஞர்களிடையே மாற்று சக்தி என்ற மாபெரும் முழக்கத்தோடு வந்த நாம் தமிழர் கட்சிக்கும் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
திரைத்துறையிலிருந்து ஈழத் தமிழ் விவகாரம், தமிழ் தேசியம் போன்ற முழக்கங்களோடு அரசியலில் குறித்த சீமானுக்கு மெல்ல மெல்ல இளைஞர்களிடையே ஆதரவு பெருகியது. திராவிட கட்சி கொள்கைகளில் வேறுபாடு கொண்டவர்கள் சீமானின் பின்னால் அணி திரள தொடங்கினர். ஆரம்பத்தில் காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த சீமான் இடையே பாஜக அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருக்கிறார்.

அதே நேரத்தில் ஆண்டு சீமானின் பேச்சுகளில் மாற்றம் நிகழத் தொடங்கியது, தேர்தல் அரசியலில் சீமானுக்கு பின்னால் அணி திரள தொடங்கியவர்களில் பல முக்கிய நிர்வாகிகள் தற்போது தனியே சென்று விட்டனர். காரணம், ஏற்கனவே சொன்னது போல ஆண்டுகாண்டு சீமானின் செயல்பாடுகளிலும் பேச்சுகளிலும் ஏற்பட்ட மாற்றம் தான். ஆரம்பத்தில் பெரியாரை உயர்த்தி பிடித்த சீமான் பின்னர் அவரை தரம் தாழ்ந்து பேசத் தொடங்கினார். அது மட்டும் அல்லாமல் பல அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒருமையில் சீமான் பேசியது அவர் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை தந்தது.
தற்போது கட்சி ஆரம்பத்திற்கு விஜயை மாநாட்டுக்கு முன்பு வரை தம்பி என்று அழைத்த சீமான் அதற்குப் பிறகு செத்துப் போய் விடுவாய் என பேசியது அவரது கட்சி தொண்டர்களையே ரசிக்க வைக்கவில்லை. இந்த நிலையில் தான் சீமான் மீது பல நிர்வாகிகள் அதிருப்தி காரணமாக வெளியேறி வருகின்றனர்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் என பலரும் வெளியேறினார். மேலும் காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் ஆகியோரும் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னரே முக்கிய நிர்வாகிகளாக அறியப்பட்ட கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் திமுகவிலும் அதிமுகவிலும் ஐக்கியமாகியுள்ளனர்.
இந்த நிலையில் சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியாக பார்க்கப்பட்ட அழகாபுரம் தங்கம், அந்த கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணி சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம் கட்சியில் இருந்து விலகுவதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது நாம் தமிழர் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பட்டியல் மீண்டும் நீளும் என்றே கூறுகின்றனர் அந்த கட்சியினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications