சேலத்தில் இன்று தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்: விஜய் பங்கேற்பாரா?
சென்னை: சேலத்தில் மாநில அளவிலான கொள்கை விளக்க முதல் பொதுக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சேலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த பொதுக் கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்குகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை நோக்கிய தமிழக வெற்றிக்கழக பயணத்தின் அடுத்தகட்டமாக, மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் உத்தரவின்பேரில், நம் கட்சியின் குறிக்கோள்களையும், கொள்கைகளையும் தமிழக மக்களிடையே கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

தவெக குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் 5 மண்டலங்கள், தவெக நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட 120 மாவட்டங்கள் மற்றும், 12,500 கிளைகளில் தவெக கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின்படி, மாநில அளவிலான கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சேலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த பொதுக் கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்குகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற தவெக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இறுதி நேரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றிருந்த நிலையில், சேலத்தில் நடைபெறும் இந்த தவெக கொள்கை விளக்க முதல் பொதுக் கூட்டத்தில் கட்சித் விஜய் பங்கேற்பாரா என்று எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே எழுந்துள்ளது. சேலத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும் விஜய் பங்கேற்பதற்கான வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!










Click it and Unblock the Notifications