2.5 கோடிப்பே.. பறந்து வந்த பறக்கும் படை.. வெறுப்பான விடுதலை சிறுத்தைகள் பெருமாள்
சேலம்: சேலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகியின் வீட்டில் ரூ 2.5 கோடி பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடத்த பறக்கும் படையினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே மேலாண்டிபட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (55). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக உள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர்களது வீட்டில் ரூ 2.50 கோடி பதுக்கி வைத்திருப்பதாக சேலம் மாவட்டத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து பெருமாளின் வீட்டிற்கு ஓமலூர் தேர்தல் பார்க்கும் படை அதிகாரிகள் விரைந்தனர்.
பெருமாளின் வீட்டிற்கு பறக்கும் படையினர் வந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் திரண்டனர். அவர்கள் அதிகாரிகளிடம், "பெருமாள் வீட்டில் சோதனை நடத்த உரிய ஆவணங்கள் இருக்கிறதா" என கேட்டனர்.
இதனிடையே தனது வீட்டில் பறக்கும் படையினர் ரெய்டு என தகவலறிந்து பெருமாள், வீட்டுக்கு வந்தார். நிர்வாகிகள் தகராறு செய்ததால் வருமான வரித் துறைக்கு பறக்கும் படையினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்த அதிகாரிகளிடம் பெருமாள் வாக்குவாதம் செய்தார்.
இதனால் பறக்கும் படையினர், பெருமாளின் வீட்டிற்குள் செல்ல முடியாமல் ஒரு மணி நேரமாக கேட்டின் முன்பு காத்திருந்தனர். இதையடுத்து சேலம் வருமான வரித் துறை உதவி ஆணையர் பிரதீப் தலைமையிலான அதிகாரிகள் வந்து வீட்டை சோதனையிட்டனர்.
இந்த சோதனை 1 மணி நேரம் நீடித்த நிலையில் "எங்களுக்கு தவறான தகவல்" கிடைத்துவிட்டது என கூறி சோதனையை முடித்துக் கொண்டு அதிகாரிகள் வெளியே வந்தனர். இந்த நிலையில் பெருமாள், எனக்கும் என் மனைவிக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இது போல் களேபரம் செய்வதாகவும் இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications