திமுக ஆட்சியை கலைக்க அரைமணி நேரம் போதும்! கே.பி.ராமலிங்கம் பேச்சால் வெடித்த சர்ச்சை!
சேலம்: திமுக ஆட்சியை கலைப்பதற்கு தங்களுக்கு அரை மணி நேரம் போதும் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசியிருக்கிறார்.
பிரதமர் மோடி ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று நினைப்பதால் திமுகவினர் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்து பேசி வருவதாகவும் சாடினார்.
பிரதமர் மோடி இந்த நிமிடம் நினைத்தால் கூட அடுத்த அரை மணி நேரத்தில் திமுக ஆட்சி தமிழ்நாட்டில் கலைக்கப்படும் என்றும் இருக்கும் இடம் தெரியாமல் ஆட்சி காணாமல் போய்விடும் எனவும் கே.பி.ராமலிங்கம் பேசியிருக்கிறார்.

தாங்கள் நினைத்தால் உடனடியாக ஆட்சியையே கலைக்க முடியும் என்று பொதுவெளியில் கே.பி.ராமலிங்கம் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடைபெற்று வரும் ஒரு ஆட்சியை, போகிற போக்கில் கலைத்துவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் ராமலிங்கம் பேசியிருப்பது அவருக்கே பாதகமாக அமைந்துள்ளது.

கே.பி.ராமலிங்கம் திமுகவில் இருந்த போது மாநிலங்களவை உறுப்பினராகவும், தென்னை விவசாயிகள் நல வாரியத்தின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் இருந்த காலத்தில் மு.க.அழகிரியின் ஆதரவாளராக அறியப்பட்ட கே.பி.ராமலிங்கம் ஸ்டாலினுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்தார் என்பது திரும்பிப் பார்க்கத்தக்கது.
இதனிடையே ஆட்சியை கலைப்போம் என திமுகவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள கே.பி.ராமலிங்கத்துக்கு திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications