"ஊர்ந்து ஊர்ந்து வந்து முதல்வராகி.. இந்த லட்சணத்துல இது வேறயா".. எடப்பாடியில் மாஸ் காட்டிய ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக விமர்சித்து பேசினார் முக ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சேலம்: "ஊர்ந்து ஊர்ந்து வந்து முதல்வராகி இந்த தமிழ்நாட்டை எடப்பாடி பழனிசாமி அழிச்சதுதான் மிச்சம்.. இந்த லட்சணத்தில் இந்த எடப்பாடி தொகுதி என்பது முதலமைச்சரை தேர்ந்தெடுத்த தொகுதி.. அதோ அந்த டேபிளில் என்ன இருக்கு தெரியுமா? இந்த ஒரு தொகுதிக்கே ஒன்னும் செய்ய முடியாதவர், 234 தொகுதிகளுக்கும் எப்படி செய்ய முடியும்?" என்று திமுக தலைவர் ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.. முதல்வரின் தொகுதியான எடப்பாடியில் இருந்தே இந்த கேள்வியை ஸ்டாலின் எழுப்பி உள்ளார்!

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி உட்பட்ட குரும்பப்பட்டியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:

"இதுவரை நான் கலந்துகொண்ட கிராம சபை கூட்டங்களிலேயே அதிக அளவு மக்கள் கலந்துகொண்ட கூட்டங்களில் ஒன்றாக இந்த எடப்பாடி தொகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டம் அமைந்திருக்கிறது... இந்த கூட்டம் தான் முதலிடம் பிடித்துள்ளது.. கூட்டத்திற்கு ஆர்வத்தோடும், ஆரவாரத்தோடும், 25 ஆயிரம் பேர் வந்திருக்கிறீர்கள்.. அதிலும் ஆண்களை விட பெண்களே அதிகம் இருக்கிறீர்கள்.. இவ்வளவு கூட்டத்தை பார்க்கும் போது, இபிஎஸ் ஆட்சியை துாக்கி எறிய வந்துள்ளீர்கள் என்று மட்டும் தெரிகிறது.

 கோரிக்கை

கோரிக்கை

இங்கே பேசிய பெண்கள் எல்லாரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்... இவற்றில் பல பணிகள் உள்ளாட்சி துறை மூலமாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஊழல்மணியாக திகழ்கிறாரே.. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பற்றி பேசினால், இந்த தொகுதி எம்எல்ஏவான முதல்வருக்கு ரொம்ப கோபம் வந்துவிடுகிறது.. ஆனால், அவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் திமுகவை விமர்சனம் செய்து வருகிறார்.

 எம்ஜிஆர்

எம்ஜிஆர்

நான், எம்ஜிஆரின் பரம ரசிகன்... அவர் படம் என்றால் ஸ்கூலை கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு போய்டுவேன்.. அந்தளவுக்கு எம்ஜிஆரின் மீது பற்று உள்ளவன்... இதெல்லாம், இபிஎஸ்சுக்கு தெரியாது... துரோகம் செய்தே பெயர் பெற்றவர் அவர்... துரோகம் என்பதற்கு உதாரணமே எடப்பாடி பழனிசாமிதான்.. வரும் 27-ம் தேதி சசிகலா வெளியே வர போகிறார். அவர் வெளியே வந்தவுடன் இவர் ஆட்டம் க்ளோஸ்.. சசிகலாவால் முதல்வரான இவர், அவருக்கே துரோகம் செய்தார்... அம்மா ஆட்சி என்று இவர்கள் சொல்கிறார்களே, அவரின் மரணம் குறித்து இதுவரை எந்த உண்மையாவது வெளியே வந்ததா? அதை ஏன் வெளியே கொண்டு வரவில்லை?

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து ஆணையம் அமைத்தனர். விசாரணை ஆணையம் அமைத்து 4 வருஷம் ஆகியும் இதுவரை இதற்கு விடையே கிடைக்கவில்லை... இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த ஆட்சியில் எந்தத் திட்டமும் பணிகளும் நடைபெறவில்லை. இந்த லட்சணத்தில் இந்த எடப்பாடி தொகுதி என்பது முதலமைச்சரை தேர்ந்தெடுத்த தொகுதி... ஆனால், நீங்கள் அவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கவில்லை.. சட்டமன்ற உறுப்பினராகத்தான் தேர்ந்தெடுத்தீர்கள்.

 தொகுதி

தொகுதி

எடப்பாடி பழனிசாமி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்... லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க போவதாக சொன்னாரே, அது நடந்ததா? நடக்கவில்லை... தமிழ்நாட்டில் வேலை கொடுக்காதது பற்றி வேண்டாம், இந்த எடப்பாடி தொகுதியிலாவது யாருக்காவது இந்த அதிமுக. ஆட்சியில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதா?

ஆட்சி

ஆட்சி

இதோ இந்த டேபிளில் அடுக்கி வெச்சிருக்கிறதை பாருங்க.. இது என்னனு தெரியுமா? வேலை வேண்டும் என்று கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த எடப்பாடி தொகுதியிலிருந்து மட்டும் படித்த பட்டதாரி இளைஞர்கள் 9,600 பேர் பதிவு செய்திருக்கிறார்கள்... பதிவு செய்த அந்த நகல்தான் இது... ஆதாரத்தோடு இங்கே வைத்திருக்கிறோம்... இதில் ஒருவருக்காவது வேலை கிடைத்திருக்கிறதா? இல்லை... கிடையவே கிடையாது. இந்த ஒரு தொகுதிக்கே அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் 234 தொகுதிகளுக்கும் அவர் எப்படி செய்ய முடியும்? அதனால், அப்படிப்பட்ட இந்த ஆட்சியை உடனடியாக நீங்கள்தான தூக்கி எறிய வேண்டும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+