"கசாப்பு கடைக்கே போன ஆடு" சேலத்தில் லஞ்ச ஒழிப்பு துறைக்கே லஞ்சம் கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
சேலம்: லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கையும் களவுமாக பிடிப்பதுதான் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் பணி. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கே லஞ்சம் கொடுக்க முயற்சித்து வசமாய் சிக்கியிருக்கிறார் சேலத்தை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம். அவர் சிக்கியது எப்படி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் மேட்டூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக சிக்கியது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலரான ரகுபதி, மேட்டூர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக இருக்கும் மீனாகுமாரி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

தீவிர யோசனை: மேலும் இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. சேலம் மேற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் சதாசிவம் (58), லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி நடவடிக்கைகளால் கவலை அடைந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக விடுப்பில் இருந்த சதாசிவம் பணிக்கு திரும்பியதும், மாட்டிக்கொள்ளமால் லஞ்சம் வாங்குவது எப்படி? என சொல்லும் அளவுக்கு தீவிர யோசனையில் இறங்கினார்.
லஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சம்: அப்போதுதான் சதாசிவத்திற்கு ஒரு வினோத எண்ணம் ஏற்பட்டது. அதாவது, லஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சம் கொடுத்து மடக்கி போட்டுவிட்டால் தொல்லை இல்லை என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு லஞ்சம் கொடுத்து ரெய்டே வரவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் என்று முடிவு செய்தார். இதற்காக லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ரவிகுமாரை நேரில் சந்தித்ததோடு செல்போனிலும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
முன் கூட்டியே சொல்லிட்டு வாங்க: எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்.. சோதனைக்கு மட்டும் வராதீர்கள்.. ஒருவேளை வந்தால் கூட முன்கூட்டியே அலார்ட் கொடுத்து விட்டு வாங்க என்று பேரம் பேசியிருக்கிறார். இதற்கு கைமாறாக மாதம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் தந்துவிடுகிறேன் என்று சதாசிவம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ரவிக்குமாரிடம் கூறியிருக்கிறார். இதைக் கேட்டதும் லஞ்ச ஒழிப்புத்துறையை சேர்ந்த ரவிக்குமார் ஒரு நிமிடம் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார்.
லஞ்ச ஒழிப்புத்துறை ஸ்கெட்ச் : இதை இப்படியே விடக்கூடாது என முடிவு செய்த ரவிக்குமார், இந்த விவகாரத்தை துணை காவல் கண்காணிப்பாளரிடம் கொண்டு சென்றார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற, சதாசிவத்தை பொறிவைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்தது. இதற்கு மத்தியில், கடந்த திங்கள் கிழமை இரவு ரவிக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்ட சதாசிவம், தனது மகனிடம் 1 லட்சம் பணம் கொடுத்து அனுப்புகிறேன்.
அதிரடி கைது: நீங்கள் அதை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து, துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையிலான விஜிலென்ஸ் போலீசார், சதாசிவம் சொன்ன சுங்கச்சாவடி பகுதிக்கு சென்றனர். சிறிது நேரத்தில் சதாசிவத்தின் மகன் அசோக் அங்கு பணத்துடன் வந்தார். அப்போது தனது தந்தை கொடுக்க சொன்னதாக கூறி ரூ.1 லட்சம் பணத்தை அசோக், ரவிக்குமாரிடம் கொடுத்தார்.
அசோக்கிடம் விசாரித்துக்கொண்டு இருக்கும் போதே அங்கு சதாசிவமும் வந்தார். உடனே சதாசிவத்தை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சம் கொடுக்க முயன்று மோட்டார் வாகன ஆய்வாளர் சிக்கியிருப்பது சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications