என்னை இங்கெல்லாம் தொட்டாரும்மா.. வாரத்துக்கு ஒருமுறை.. கதறிய மகள்.. பதறிய தாய்.. தலைமறைவான தந்தை!
தந்தை மீது 11 வயது மகள் போலீசில் புகார் அளித்துள்ளார்
சேலம்: "அப்பா என்னை இங்கெல்லாம் தொட்டாரும்மா.. வாரத்துக்கு ஒருமுறை வரும்போதெல்லாம் தொடராரு" என்று மகள் சொல்வதை கேட்டு பதறிவிட்டார் தாய்! பாலியல் தொல்லை பெற்ற தகப்பன் மீது 11 வயது மகளே போலீசில் புகார் அளித்துள்ளார்.
சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம்.. இவரது மகள் சந்திரா.. சேலம் அரசு மகளிர் கல்லூரியில், உதவி பேராசிரியையாக பணிபுரிகிறார். இவரது கணவர் ராஜேந்திரன்.. 45 வயதாகிறது.. கரூர் அரசு கல்லூரியில், உடற்பயிற்சி இயக்குனராக வேலை பார்க்கிறார்.

கடந்த, 2006ல் இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டனர். ஆனால் 2 வருடத்துக்கு முன்பு தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னையில் பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 13 வயது மகள் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கிறார். 11 வயது மகள் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த 11 வயது மகள், சேலம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழு உறுப்பினர் தாமரை, சைல்டு லைன் உறுப்பினர் சிவசக்தி, மேலும் தன் தாயாரையும் அழைத்து கொண்டு ஆத்தூர் ஆத்தூர் மகளிர் போலீசில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
அதில், "தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். அம்மா இல்லாத போது அப்பா என்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் தொந்தரவுகள் செய்துவந்தார். வாரம் ஒருமுறை, என் லீவு நாட்களில் பாட்டி வீட்டுக்கு வந்து எனக்கு பாலியல் தொந்தரவு தந்தார். இது குறித்து எனது தாயாரிடம் பலமுறை கூறினேன். என் அம்மா இதை நேற்று முன்தினம் நேரிலேயே பார்த்துவிட்டார்.
என் தந்தை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, ராஜேந்திரன் மீது, 'போக்சோ' வழக்கு பதிந்துள்ளனர். இதனிடையே சம்பந்தப்பட்ட உடற்கல்வி இயக்குனரை காணவில்லையாம்.. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 11 வயது மகளுக்கு பெற்ற தந்தையே பாலியல் டார்ச்சர் தந்தது சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications