"சின்னபொண்ணுதான் வெட்கப்படுது".. சீறிய பேருந்து! அடுத்து நடந்த கொடூரம்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
சேலம்: எடப்பாடி அருகே தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேற்று மாலை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 30ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
Recommended Video
இந்த விபத்துக் குறித்து சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து 30ற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சங்ககிரியை நோக்கி கோழிப்பண்ணை அருகே நேற்று மாலை சென்றது.

தனியார் பேருந்து
தனியார் பேருந்து வேகமாக சென்ற நிலையில், அதில் சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது பாடல் ஓடிக்கொண்டு இருந்தது. டிரைவரும் பாடலை கேட்டுவிட்டு மிக வேகமாக பேருந்தை இயக்கினார். பேருந்து வேகமாக சென்ற போது திருச்செங்கோட்டிலிருந்து எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதியது. எதிரே வந்த பேருந்து தவறான சைடில் வந்தது. கல்லூரி பேருந்து ஏறி வருவதை பார்த்த தனியார் பேருந்து டிரைவர் பேருந்தை உடனே திருப்பி விபத்தை தவிர்க்க முயன்றார்.

விபத்து
ஆனால் அவர் பேருந்தை திருப்பும் முன் எதிரே வேகமாக வந்த கல்லூரி பேருந்து திடீரென தனியார் பேருந்தில் மோதியது. நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி இரண்டு பேருந்துகளும் புளிய மரத்தில் மோதி சாய்ந்து நின்றது. அப்போது தனியார் பேருந்தின் ஓட்டுனர் அருணாச்சலம் பேருந்து எஞ்சின் மேல் தூக்கி வீசப்பட்டார். அவர் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

காயம்
அதேபோல் அம்மா.. ஐயோ.. ஆ என்று பயணிகள் அலரும் சத்தமும் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன் பக்கத்தில் இருந்த பயணிகள் இந்த விபத்தில் மோசமாக காயம் அடைந்தனர். இவர்கள் இரண்டு பேருந்துகளிலும் படுகாயம் அடைந்தவர்கள் எடப்பாடி, சங்ககிரி, மற்றும் சேலம், உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தலையில் அடி
டிரைவர் உட்பட பலருக்கு இதில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள்தான் பயனிகளை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் பேருந்தும் தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துகள் குறித்து கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications