அலமேலு அக்கா சிரிப்பில் கவிழ்ந்த பிரபலம்.. தனிமையில் சிக்கி தப்பிய பிசினஸ்மேன்.. யாரிந்த சேலம் பெண்?
சேலம்: சேலம் மாவட்டத்தை சேர்ந்த அலமேலு என்பவர், தன்னை ஒரு வழக்கறிஞர் என்று சொன்னதால்தான், பலரும் அவரிடம் மிகுந்த மரியாதை வைத்து பேசினார்கள்.. கடைசியில் அலமேலு செய்த காரியத்தை பார்த்தீங்களா? இந்த சம்பவம் தொடர்பாக எண்ணற்ற நபர்கள் தொடர்ந்து கைதாகி கொண்டே உள்ளனர்.. என்ன நடந்தது சேலத்தில்?
சேலம் மாவட்டம் பூசாரிபட்டியை சேர்ந்தவர்தான் அலமேலு.. 25 வயதாகிறது.. திருமணமானவர்... இவருக்கு ஓமலூரை அடுத்த ஆர்.சி.செட்டிபட்டியை சேர்ந்த சகோதரர்களான ஜனார்த்தனன் (28) மற்றும் ஜனஅம்சபிரியன் (28) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது..

சேலம் அலமேலு அக்கா
இந்த பழக்கத்தை பயன்படுத்திக் கொண்டு 3 பேரும் சேர்ந்து பணம் பறிக்கும் நோக்கில் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முக்கிய நபர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன் நம்பர்களை சேகரித்துள்ளனர்.
வக்கீல் - ஆண் நண்பர்கள்
பிறகு அந்த நம்பர்களுக்கு அலமேலுவை தொடர்பு கொள்ள வைத்து, நட்பாக பேச வைத்து, அதன்மூலம் அவர்களிடம் எல்லாம் பழக்கம் ஏற்படுத்தியுள்ளனர். செல்போனில் தொடர்ந்து பேசுவதன் மூலம் நம்பிக்கை பெற்ற அலமேலு, அந்த நம்பிக்கையை வைத்தே பலரிடமிருந்து பணம் பெற துவங்கினார்..
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி பணம் வாங்கி உள்ளார்.. ஒரு கட்டத்தில் அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது, நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பாராம்..
உடனே அலமேலுவின் பேச்சை நம்பி வந்த ஆண்களை வீட்டிற்குள் வரவழைத்து, சக கும்பல் உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை கட்டிப்போட்டு, ஆடைகளை களைந்து ஆபாசமாக வீடியோ எடுத்துவிடுவார்களாம்.. அந்த வீடியோக்களை காட்டி, லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும் என்றும், பணம் தராவிட்டால் சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்றும் மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
சிக்கிய பல பிரபலங்கள்
இப்படி கடந்த சில மாதங்களாகவே இந்த கும்பலின் சதி வலையில் பலர் சிக்கியதாக தெரிகிறது.. இவர்கள் எல்லாருமே பெரும் புள்ளிகள், பிரபலங்களும்கூட..
இதனால் அவமானத்தாலும், பயத்தாலும் போலீசுக்கு போகவில்லை.. மேலும் அலமேலு கேட்ட பணத்தையும் பலர் கொடுத்ததாகவும் தெரிகிறது..
அலமேலுவின் இந்த வலையில் கடைசியாக விழுந்தவர்தான் பூபதி... ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்.. 32 வயதாகிறது.. ஆர்.சி.செட்டிபட்டி பகுதியை சேர்ந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக 2 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தபோதுதான் வக்கீல் அலமேலு இவருக்கு அறிமுகமாகி உள்ளார்.
கேஸ் விஷயமாக அடிக்கடி பேச வந்த அலமேலு, சில நாட்களிலேயே பூபதியிடம் நெருங்கி பழகி உள்ளார்.. வழக்கு செலவுக்கு அவசர தேவை என்று சொல்லி, பூபதியிடம் இருந்து 92,0000 ரூபாயை கடனாக அலமேலு வாங்கியுள்ளார். அதை பூபதி திரும்ப கேட்டபோதுதான் இருவருக்கும் தகராறு வெடித்துள்ளது..
தனிமையில் அலமேலு
பணத்துக்கு பதிலாக புதிய செல்போன் ஒன்றை தருவதாக பூபதியிடம் அலமேலு சொன்னாராம்.. அந்த செல்போனை வீட்டுக்கு வந்து வாங்கி கொள்ளும்படி சொல்லவும், பூபதியும் சென்றுள்ளார்.. அப்போது பூபதியுடன் அலமேலு நெருங்கி பேசியிருக்கிறார்.. இருவரும் நீண்ட நேரம் தனிமையில் இருந்துள்ளனர்... இதை அலமேலுவின் ஆண் நண்பர்கள் ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்..
மேலும் பூபதி அணிந்திருந்த 3 சவரன் செயின், 30000 ஜிபே மூலம் பணம் பறித்து, பூபதியை அங்கிருந்து அடித்து விரட்டி உள்ளனர். இதற்கு பிறகுதான் போலீசுக்கு சென்றுள்ளார் பூபதி.
அலமேலுவிடம் இவரும் சிக்கி கொண்டார்.. பணம் மற்றும் நகைகளை இழந்துள்ளார்... தன்னை போல இனி யாருமே பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தீவட்டிப்பட்டி போலீசில் அலமேலு மீது புகார் அளித்தார்.
நீளும் கைது நடவடிக்கைகள்
அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, செம்மாண்டப்பட்டியை சேர்ந்த முருகேசன் (36), செல்வன் (28), ராகிபட்டியை சேர்ந்த திருமால் அழகன் (21), பிரவீன் குமார் (23), பூசாரிப்பட்டியை சேர்ந்த போலி வக்கீல் அலமேலு (25) உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பலை கடந்த 4 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இப்போது இதே விவகாரத்தில் மேலும் 4 பேர் சிக்கி உள்ளனர்.. காமலாபுரத்தை சேர்ந்த தனியார் பள்ளி பஸ் ஓட்டுனர் கணேசன் (44) அளித்த புகாரின் அடிப்படையில், இந்த குற்றச்செயலின் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜனார்த்தனன், ஜனஅம்சபிரியன், செம்மாண்டப்பட்டி ஸ்ரீதர், ஆர்சி செட்டிப்பட்டி கவுதமன் ஆகிய 4 பேரையும் ஓமலூர் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.. அவர்கள் பயன்படுத்திய செல்போன்களில் இருந்தும் பல்வேறு தகவல்கள் பெறப்பட்டுள்ளன.. இந்த கும்பல் மோசடி செய்தவர்களில் காவல் உதவி ஆய்வாளர், பஸ் டிரைவர் உட்பட 9 பேர் அடக்கம்.. இந்த வழக்கில் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதால், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications