லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரி.. 8 ஆண்டுகளுக்கு பின் டிஸ்மிஸ்! உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு
சேலம்: சேலம் மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரான கணேசன் 8 ஆண்டுகளுக்கு முந்தைய லஞ்சப் புகாரில் இப்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். தமிழக உள்துறைச் செயலர் அமுதா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட போலீசார் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பெரியளவில் வன்முறை, கலவரம் நடக்காமல் இருக்க போலீசாரின் பணி மிக மிக முக்கியமானது.

இருப்பினும், இந்த போலீசார் துறையிலும் கூட சிலர் சட்டத்தை மீறி முறைகேடாக நடந்து கொள்கிறார்கள். அவர்களைக் கண்காணித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டே வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
டிஸ்மிஸ்: சேலம் மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றிய கணேசன் மீதான லஞ்ச புகாரில் இப்போது அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முந்தைய லஞ்ச புகாரில் உள்துறைச் செயலர் அமுதா உத்தரவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னணி: இந்த கணேசன் இதற்கு முன்பு பழனி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் வேலை செய்து வந்துள்ளார்.. அப்போது அவருக்கு எதிராக மிகப் பெரிய லஞ்ச புகார் வெடித்தது. அதாவது, நில விவகாரம் ஒன்றில் பிரச்சினையை ஒரு தரப்புக்கு ஆதரவாக முடித்து வைக்க லஞ்சம் கேட்டதாகப் புகார் எழுந்தது. அப்போது பழனி டவுன் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக இருந்த சண்முக சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டரான இருந்த கணேசனுக்கு எதிராகப் புகார்கள் கிளம்பின.
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியானது. இதுவே இவர்களுக்கு மிகப் பெரிய சிக்கலாக மாறியது. புகார் அளிக்கச் சென்றவர்களிடமே போலீசார் லஞ்சம் வாங்குவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.. இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு உள்துறைச் செயலருக்கு ரிப்போர்ட் அனுப்பி வைக்கப்பட்டது.
பணி நீக்கம்: இந்த ரிப்போர்ட் அடிப்படையில் போலீஸ் அதிகாரி கணேசனை டிஸ்மிஸ் செய்யத் தமிழக உள்துறைச் செயலர் அமுதா இப்போது உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கணேசனின் பணி நீக்கம் ஆணையைச் சேலம் மாநகர காவல் ஆணையரான விஜயகுமாரி அவரிடமே நேரில் வழங்கினார். லஞ்சப் புகார் ஒன்றில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஸ்பெக்டர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது பேசுபொருள் ஆகி இருக்கிறது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications