சேலம் மஞ்சுளா.. அந்த தாசில்தார் அமாவாசைக்கு அட்வான்ஸ் கேட்டாராம்.. நில அளவீடு செய்ய கேட்டால்? போச்சு
சேலம்: நிலத்தை அளப்பது, பட்டா வழங்குவது, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு பொதுமக்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்ல நேர்ந்தால், அவர்களிடம் லஞ்சம் வாங்கும் போக்கு இன்னமும் சில அதிகாரிகளிடம் உள்ளது.. இதனால், பொதுவெளியிலேயே கைதாகி வருகிறார்கள். அந்தவகையில், சேலத்தில் ஒரு அதிகாரி கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சமீபகாலமாகவே, தமிழக வருவாய் மற்றும் பதிவுத்துறையில் பல்வேறு லஞ்ச புகார்கள் பெருகி வருகின்றன.. இதுபோன்ற குறைபாடுகளை களைவதற்கான முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றாலும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை, குறையவில்லை..

பொறுப்புள்ள அதிகாரிகளே, இப்படி தினம் தினம் கைதாகிவருவது பொதுமக்களுக்கு கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.. நேற்று மட்டும் ஒரே நாளில், வெவ்வேறு மாவட்டத்தில், 2 அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதாகியிருந்தது பெரும் அதிர்ச்சியை தந்திருந்தது.
சொத்து பதிவு: அதாவது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மகாராஜா என்பவர், தன்னுடைய மூதாதையரின் சொத்துக்களை பங்கு பிரித்து பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் ஜியாவுதீனை சந்தித்து விண்ணப்பித்திருக்கிறார்.
அதற்கு பத்திரம் பதிவு செய்வதற்கு ரூ. 40,000 லஞ்சம் கேட்டாராம் சார் பதிவாளர்.. பிறகு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பதிவு செய்து தருகிறேன் என்று பேரம் பேசினாராம். மகாராஜாவுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாமல், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று ஜியாவுதீனிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரம் தந்துள்ளனர்.
ஆனால், பணத்தை, தான் வாங்காமல், பத்திர எழுத்தரின் உதவியாளர் எடிசனிடம் தருமாறு சொல்லி உள்ளார் சார் பதிவாளர்.. அதன்படியே அவரிடம் மகாராஜா ரூ.20 ஆயிரத்தை வழங்கியபோது, மறைந்திருந்த அதிகாரிகள் சுற்றிவளைத்து, சார் பதிவாளர் ஜியாவுதீனையும், எழுத்தர் எடிசனையும் கைது செய்தனர்.
விஏஓ சிக்கினார்: அதேபோல, அரியலுார் மாவட்டத்தில், வங்குடி கிராம நிர்வாக அலுவலராக புகழேந்தி என்பவரிடம், அய்யப்பன் நாயக்கன்பேட்டை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தன்னுடைய நிலத்தை அளவை செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு ரூ.2000 லஞ்சம் கேட்டாராம். இதனால் வேல்முருகனும், லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் போலீசில் புகார் தந்ததையடுத்து, விஏஓ புகழேந்தி கைதானார்.
இன்றுகூட சேலம் மாவட்டத்தில் தாசில்தார் கைதாகியிருக்கிறார்.. தம்மம்பட்டியை சேர்ந்த மஞ்சுளா என்பவர். நில அளவீடு செய்து நீரோடை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக, கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணனை அணுகியுள்ளார். அப்போது, நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமானால், ரூ.5 லட்சம் லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார் தாசில்தார்.. அதிலும் இன்று தை அமாவாசை என்பதால், 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் பணம் தர வேண்டும் என்றும் கேட்டாராம்.
அட்வான்ஸ் பணம்: இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மஞ்சுளா, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார்.. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் ரு.10 ஆயிரத்தை முன்பணமாக தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் மஞ்சுளா கொடுக்கவும், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் லஞ்ச பணத்துடன் தாசில்தாரை கையும் களவுமாக பிடித்தனர்.. இப்போது அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications