பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கு.. பேராசிரியர்கள் ஜெயராமன் உள்பட 5 பேர் போலீசில் ஆஜர்
சேலம்: பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் பதிவாளர் பொறுப்பில் உள்ள பேராசிரியர் விஸ்வநாத மூர்த்தி உள்பட 5 பேர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி உள்பட 5 பேர் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆகி உள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன். இந்த நிலையில் இவர் மீது உரிய அனுமதி இன்றி நிறுவனம் தொடங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் சதீஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோரின் பெயர்கள் புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன் உள்பட 4 பேர் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், கூட்டு சதி, அரசு ஊழியராக இருந்து கொண்டு ஏமாற்றுதல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜெகநாதனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். நேற்று இரவு ஜெகநாதன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பொறுப்பில் உள்ள பேராசிரியர் விஸ்வநாத மூர்த்தி, பதிவாளர் அலுவலகத்தில் பிரிவு அலுவலராக பணியாற்றி வரும் விஷ்ணு மூர்த்தி, அவரது மனைவி வனிதா, பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெயராமன் மற்றும் சுப்பிரமணிய பாரதி ஆகிய 5 பேருக்கும் இன்று ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெயராமன் மற்றும் சுப்பிரமணிய பாரதி உள்பட 5 பேர் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். 10.30 மணிக்கு ஆஜர் ஆகும் படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications