அடுத்த அதிரடி.. பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேருக்கு சம்மன்.. தீவிரமாகும் விசாரணை
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் தான் விசாரணைக்கு ஆஜராகும்படி பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் உள்பட 5 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன். இவர், பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி விதிகளை மீறி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் சதீஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோரின் பெயர்கள் புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் இந்த பவுண்டேஷன் மூலம் அரசுப் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன் உள்பட 4 பேர் மீது கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், அரசு ஊழியராக இருந்து கொண்டு ஏமாற்றுதல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக கருப்பூர் போலீசார் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் உள்பட 5 பேர் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பில் உள்ள பேராசிரியர் விஸ்வநாத மூர்த்தி, பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி உள்பட 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் நாளை காலை 10.30 மணிக்கு போலீஸ் முன்பு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என போலீசார் நம்புகின்றனர். இதனால் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications