கடன் பிரச்சினை! மனைவி, மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்த சேலம் வெள்ளி பட்டறை அதிபர்
சேலம்: சேலத்தில் கடன் பிரச்சினை காரணமாக தனது பெண் குழந்தையுடன் தம்பதி உள்பட மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அரிசிபாளையம் முத்தையா தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். நீண்ட காலமாக வெள்ளி தொழில் செய்து வரும் அருள் புதிதாக வீடு கட்டி அதில் குடியேறியுள்ளார். பல லட்சம் கடன் பெற்று புதிய வீடு கட்டிய பால்ராஜ் அதில் ஒரு பகுதியாக வெள்ளி பட்டறையும் வைத்து தொழில் புரிந்து வந்தார்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வீட்டுக் கடனை கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனிடையே வெள்ளி கொலுசு தயாரிப்பில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்து அதை திரட்ட முடியாமல் இருந்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த வெள்ளி பட்டறை தொழிலதிபர் பால்ராஜ், அவரது மனைவி ரேகா, மகள் ஜனனி ஆகிய மூவரும் நேற்று இரவு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நீண்ட நேரம் ஆகியும் யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது குடும்பத்துடன் அருள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
நிகழ்விடம் சென்ற காவல்துறையினர் மூன்று சடலங்களையும் கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலதிபர் பால்ராஜை யாரேனும் மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications