அதிகார தோரணையில் எஸ்ஐ அடிச்சுட்டாரு.. சாகப்போறேன்.. சிவனடியார் மரண வாக்குமூலம்
சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே அதிகார தோரணையில் எத வேணாலும் செய்யலாம்னு சப் இன்ஸ்பெக்டர் என்னை அடித்துவிட்டார். நான் சாக போகிறேன் என்று கூறி சிவனடியார் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மரண வாக்குமூலம் வாட்ஸ் அப்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே புளியம்பட்டி குண்டாங்கல்காடு பகுதியில் வசித்து வந்தவர் சரவணன் (42). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 11ம் வகுப்பு படிக்கும் மகளும், 8ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளார்கள்
Recommended Video
சிவனடியாரான சரவணன் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் பூஜை செய்வாராம். அத்துடன் இடைப்பாடபகுதியில் இவரிடம் பலர் தேடிவந்து பல்வேறு நோய்கள் குணமாக வேண்டி தாயத்து மற்றும் மந்திரித்த கயிறு வாங்கி சென்றிருக்கிறார்கள்.

பெண்ணுக்கு தாயத்து
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி மாலை சரவணன், பெண்ணுக்கு மந்திரித்து பூஜை செய்து தாயத்து கட்டிக் கொண்டிருந்தார். அப்போது சரவணன் அரை நிர்வாணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அங்கு வந்த தேவூர் எஸ்ஐ அந்தோணி மைக்கேல் மற்றும் போலீசார், சரவணனை அடித்து உதைத்தார்களாம்.

சரவணன் வாக்குமூலம்
இந்நிலையில் மறுநாள் காலையில் இருந்து சரவணன் மாயமானார். சரவணன் தன்னுடைய நண்பர்களுக்கு மொபைலில் வீடியோ ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் பேசிய சரவணன், ‘என்னோட இந்த முடிவுக்கு, மன உளைச்சலுக்கு எஸ்ஐ அந்தோணி மைக்கேல்தான் காரணம். என்னை ரொம்ப அடிச்சதால மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன். என்னோட இந்த கஷ்டமான முடிவுக்கு வேற யாரும் காரணமில்லை என்று கூறியிருக்கிறார்.

அதிகார தோரணை
மேலும் அந்த வீடியோவில். "அதிகார தோரணையில் எத வேணாலும் செய்யலாம்னு அந்தேணி மைக்கேல் (தேவூர் எஸ்ஐ) என்னை அடித்தார். அத்தனை பேரையும் என் ஆன்மா சும்மா விடாது. அப்ப உன்கிட்டே வர்றேன்' என்று கூறியிருக்கிறார்.

போலீஸ் விசாரணை
இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியிருக்கிறார்கள். சரவணனின் உடல், அவரது வீட்டுக்கு அருகே காட்டுப்பகுதியில் பாறைகளுக்கு இடையே அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.. இது குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.. மந்திரவாதி சரவணன் பேசி வெளியிட்ட மரண வாக்குமூல வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications