எடப்பாடி- சேலம் சாலையில்.. கட்டிப்புரண்டு சண்டை போட்ட சத்யா.. பேண்டை கேட்டு கெஞ்சிய மணி
சேலம்: சேலம் மாவட்டம், பழைய எடப்பாடி பகுதியைச் சேர்ந்த ஆட்டுக்காரர் என்ற மணி தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு எடப்பாடி-சேலம் பிரதான சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள கடை தெருவில் ஏ.டி.எம். காவலாளி மணி, பெண் ஒருவருடன் கட்டி புரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்று பார்ப்போம்.
சேலம் மாவட்டம், பழைய எடப்பாடியை அடுத்த ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்த 60 வயதாகும் ஆட்டுக்காரர் என்ற மணி, எடப்பாடி பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். ஏடிஎம் காவலாளி மணி, நேற்று இரவு எடப்பாடி-சேலம் பிரதான சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள கடை தெருவில் அரைகால் டவுசர் மட்டும் அணிந்தவாறு ஒரு பெண்ணை துரத்திக்கொண்டு ஓடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த பெண் துரத்தி பிடித்த மணி, அவரிடம் தனது பேண்ட், சட்டையை கொடுக்குமாறு கெஞ்சியிருக்கிறார்.

ஆனால் அந்த பெண் அதை தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த காவலாளி மணி திடீரென்று அந்த பெண்ணின் சேலையை உருவி அவரை இழுத்து சென்றார். தொடர்ந்து அரை நிர்வாணத்துடன் இருவரும் சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், கட்டி புரண்ட அவர்களை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.
இதில் அந்த பெண் எடப்பாடி-ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள மாட்டாஸ்பத்திரி பஸ் பேருந்து நிறுத்தம் பகுதியை சேர்ந்த சத்யா (40) என்பது தெரியவந்தது. தனது சொந்த வேலையாக எடப்பாடிக்கு வந்துள்ளார். அப்போது ஏ.டி.எம். காவலாளி மணி அவரிடம் 2 ஆயிரம் ரூபாயை அபகரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதை மீட்டு தருமாறும் அருகில் இருந்தவர்களிடம் கூறினார்.
ஆனால் ஏ.டி.எம். காவலாளி மணி தன்னிடமிருந்து தான் அந்த பெண் பணத்தை பறித்து கொண்டதாகவும், அதை தட்டி கேட்டபோது தனது ஆடைகளை உருவி விட்டதாகவும் அங்கிருந்தவர்களிடம் கதறியபடி கூறினார். தொடர்ந்து நீண்ட நேரமாக அப்பகுதியில் அரைகுறை ஆடையுடன் இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் இந்த காட்சியை கண்டு கோபம் அடைந்தனர். சேலம் எடப்பாடியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications