சேலம் வெள்ளிப்பட்டறை உரிமையாளர் குடும்பம்.. மனைவி செய்த தவறு என்ன ? கலக்கத்தில் கந்துவட்டிக்காரர்கள்
சேலம் அரிசிபாளையம் முத்தையாள் தெருவை சேர்ந்த 45 வயதாகும் பால்ராஜ் தனது வீட்டிலேயே வெள்ளி பட்டறை தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி ரேகா (38). இவர்களுடைய மகள் ஜனனி (16). இவர் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த ஜனவரி 28ம் தேதி அன்று பால்ராஜ், தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பால்ராஜ், கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனிடையே தற்கொலைக்கு முன்பாக பால்ராஜ் எழுதிய கடிதத்தில் கடன் இருந்ததாகவும், அதனால் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால், கடிதத்தின் முழு விவரம் வெளியாகவில்லை.. அதேநேரம் யாரிடம் எல்லாம் பால்ராஜ் கடன் வாங்கி இருந்தார். யார் எல்லாம் கடன் கேட்டு நெருக்கடி கொடுத்தனர் என்ற விவரங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் வீடு கட்டுவதற்காக பால்ராஜ் வங்கி ஒன்றில் கடன் வாங்கி இருந்ததாகவும், அதற்கான தவணை தொகையை ஒவ்வொரு மாதமும் சரியாக செலுத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் நெருக்கடி நிலையால் தவணை தொகை செலுத்த கடன் வாங்கியதாக தெரிகிறது.
இது ஒருபுறம் எனில், பால்ராஜ்க்கு தெரியாமல் அவருடைய மனைவி ரேகா வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதற்கிடையே கணவன்- மனைவி இருவருக்கும் கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தார்களாம்.
குறிப்பாக கடன் கொடுத்தவர்கள் கந்துவட்டி கேட்டு மிரட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. கந்து வட்டி நெருக்கடி, அதிக கடன் சுமை வாழ்க்கையை முடித்துக் கொள்ள கணவனும், மனைவியும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்ததகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாம்.
இதையடுத்து பால்ராஜூக்கு கடன் கொடுத்தவர்கள் யார்? எந்த தேதியில் கடன் கொடுத்தார்கள். எவ்வளவு கொடுத்தனர். எவ்வளவு வட்டி கட்டி உள்ளார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்களாம்.. இந்த விசாரணைக்கு பின்னரே பால்ராஜ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமானவர்கள் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படகிறது. இதனால் பால்ராஜ்க்கு கந்துவட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications