நயன்தாராவை பற்றி தானே பேசினேன்... திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும்... ராதாரவி கேள்வி
Recommended Video
சேலம்: சினிமா நடிகை பற்றி நான் பேசியதற்கு திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும் என்று நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பி உள்ளார்.
திரையுலகில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பல விமர்சனங்களை எதிர்கொண்டிருப்பவர் நடிகர் ராதாரவி. சமீபத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசியது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது

மூத்த நடிகரான ராதாரவியின் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதன் எதிரொலியாக, தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகர் ராதாரவி, நேற்று சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் நான் 18 ஆண்டுகளாக இருந்துள்ளேன். ஆனால், திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என்று நடிகர் ராதாரவி விளக்கமும் அளித்தார்.
இந்தநிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராதாரவி, திமுக தலைமையில் குழப்பம் உள்ளது. சினிமா நடிகை பற்றி நான் பேசியதற்கு திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், கடந்த 3 ஆண்டுகளில் விஷால் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கம், நாடக நடிகர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றார். நடிகர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது, இது தானாக வெளியே வரும் என்றும் ராதாரவி கூறியுள்ளார்.
இதனிடையே, தனக்கு வாக்கு உரிமை வழங்கப்படாததால் நீதிமன்றம் சென்றுள்ள நடிகர் ராதாரவி, தேர்தலை நடத்த விடமாட்டேன். ஜூன் 23 ந் தேதி கண்டிப்பாக நடிகர் சங்க தேர்தல் நடக்காது என்று தொடர்ந்து வருகிறார். இதுவரை, பாண்டவர் அணியினர் 9 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.
-
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications