நல்லாதான் உட்கார்ந்திருந்தார் அகல்யா.. திடீரென கையில் இருந்த பேனா கத்தியை.. ஓடும் பஸ்சில் கொடுமை!
ஓடும் பஸ்ஸில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
Recommended Video
சேலம்: அதுவரைக்கும் பஸ்ஸில் நல்லாதான் உட்கார்ந்திருந்தார் அகல்யா.. திடீரென கையில் இருந்த பேனா கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த தொழிலாளர் இல்லப் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம். இவர் முன்னாள் ராணுவ வீரர், பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இவர் மேட்டூர் மின்வாரிய பணிமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி அகல்யா 48 வயதாகிறது. இவர்களுக்கு காயத்ரி என்ற 23 வயது மகள் உள்ளார். ஆனால் 7 வருஷத்துக்கு முன்னாடி காயத்ரி ஒரு இளைஞரை லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டார்.
ஒரே மகள் இப்படி செய்து விட்டாளே என்ற கோபத்தில், அவருடைய தந்தை காயத்ரியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தாய் அகல்யா சமாதானம் ஆகி விட்ட போதிலும், கணவர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தவித்த அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சேலம் சென்று விட்டு தனியார் பஸ்ஸில் மேட்டூர் திரும்பி கொண்டிருந்தார் அகல்யா. அப்போது குள்ளமுடையானூர் என்ற இடத்தின் பெயர் பலகையை பார்த்தார். அங்குதான் மகள் காயத்திரி வசிக்கிறார். அந்த பெயர் பலகையை பார்த்ததும், ஆவேசமான அகல்யா, கையில் வைத்திருந்த பேனா கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.
கழுத்தில் ரத்தம் பீறிட்டு வந்ததைக் கண்ட பயணிகள் அலறினர். இதனையடுத்து அகல்யா சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இப்போது அகல்யாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஓடும் பஸ்ஸில் பெண் ஒருவர் திடீரென தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் மேட்டூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications