என்னா கொழுப்பு பாருங்க.. மேல் பர்த்திலிருந்து நைஸா இறங்கி வந்து தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம்!
ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது செய்யப்பட்டார்
சேலம்: ரயில் பெர்த்-ல் இருந்தவர், கீழே இறங்கி வந்து... படுக்கையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷ வேலையை காட்டினார். இதையடுத்து, இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார்.
சென்னை - ஆலப்புழா எக்ஸ்பிரஸ்-ல் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் தன்னுடைய அம்மாவுடன் பயணம் செய்தார். கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் இந்த பெண். வயசு 24 ஆகிறது. ரிசவர்வேஷன் செய்திருந்ததால், கீழ்படுக்கையில் இந்த பெண் படுத்து தூங்கி கொண்டு வந்தார்.

பர்த்-ல் படுத்து கொண்டிருந்த ஒரு இளைஞர் இந்த பெண்ணை ரொம்ப நேரமாக பார்த்து கொண்டே இருந்தார். சேலம் அருகே ரயில் வந்தபோது, கீழே இறங்கி வந்து, இளம்பெண்ணிடம் சில்மிஷத்திலும், சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதனால் தூங்கி கொண்டிருந்த அந்த பெண், பதறி அடித்து கொண்டு எழுந்து கத்தி கூச்சல் போட்டார். இதனால் அந்த கம்பார்ட்மென்ட்டில் இருந்தவர்கள் எல்லோருமே திரண்டு வந்து இளைஞரை மடக்கி பிடித்து சேலம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ரெயில்வே போலீசில் அந்த இளம்பெண் புகார் கொடுக்கவும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த இளைஞர் திருத்தணியை சேர்ந்த 30 வயதுடைய பிரவீன்குமார் என்பதும், எர்ணாகுளத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கிறார் என்பதும், தெரியவந்தது.
பெண்ணிடம் சீண்டலில் ஈடுபட்டபோது குடிபோதையிலும் இருந்திருக்கிறார். இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரவீன்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications