ஜி.செல்வம் காஞ்சிபுரம் திமுக வேட்பாளர்: மீண்டும் வெற்றி வசப்படுமா?
ஜி.செல்வம் காஞ்சிபுரம் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக வழக்கறிஞர் ஜி.செல்வம் போட்டியிடுகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா சிறுவேடலைச் சேர்ந்தவர் செல்வம் (45). வழக்கறிஞரான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். செல்வம் விவசாயியும் கூட.

கடந்த 1996ம் ஆண்டு திமுக பிரதிநிதியாக பதவி வகித்தவர். 1997ம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட்டு கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கியின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2008ம் ஆண்டு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். 2008 முதல் 2012 வரை மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளராக இருந்தார். தற்போது வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலராக இருக்கிறார்.
கடந்த 2014ம் ஆண்டு இதே காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவரையே அத்தொகுதியில் திமுக களமிறக்கியுள்ளது.
செல்வம் தனது தந்தை கணேசனை போன்றே இளம் வயதில் இருந்து திமுகவில் அரசியல் பணிகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications