சிக்கியது ஆடியோ.. பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த பாஜக அமைச்சர்.. பதவி ராஜினாமா.. கோவாவில் பரபரப்பு
கோவா பாஜக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்
கோவா: பாலியல் புகாரில் சிக்கிய பாஜக அமைச்சர் ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பது கோவாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோவாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய பாஜக அமைச்சர் ஒருவர் பதவி விலகியிருப்பது அக்கட்சிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மிலிந்த் நாயக் ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.. தன்னுடைய அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி அந்த பெண்ணுக்கு டார்ச்சர் தந்ததாக கூறப்பட்டது..

துஷ்பிரயோகம்
கடந்த நவம்பர் 30ம் தேதி, ஆளும் பாஜக அமைச்சர் இந்த பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், 15 நாட்களில் பாஜக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்காவிட்டால் அந்த அமைச்சரின் பெயரை வெளியிடுவோம் என்றும் கூறியிருந்தது.. இது கோவா அரசியலில் பெரும் புயலை வீசியது.. ஆனால், கோவா மாநில பாஜகவோ எதை பற்றியுமே கவலைப்படவில்லை..

சவால்
அம்மாநில பாஜக தலைவர், முடிந்தால் அந்த அமைச்சரின் பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம், அப்படி காங்கிரஸ் கட்சி பெயரை வெளியிட்டால் அந்த அமைச்சர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் சவால் விடுத்திருந்தது. தற்போது சவால் விடுத்து 15 நாட்கள் அவகாசம் முடிவடைந்துவிட்டதால், பாஜகவின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மிலிந்த் நாயக்தான் அந்த அமைச்சர் என்றும், அவர் தன்னுடைய அமைச்சர் பதவியை பயன்படுத்தி பீகாரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் தந்ததாகவும் வெளிப்படையாக காங்கிரஸ் கூறியுள்ளது..

பெண்
இப்படி ஒரு புகாரை சொன்னது, கோவா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிரிஷ் சோடங்கர் என்பவர்தான். அமைச்சருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் மெசேஜ்களையும் ஸ்க்ரீன்ஷாட்களை வெளியிட்டுள்ளார்.. அத்துடன், அமைச்சரும் அந்த பெண்ணும் போனில் பேசிய ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. அத்துடன் இந்த ஆதாரங்கள் அத்தனையையும் கொண்டுபோய், போலீசில் புகாராகவும் தந்தது காங்கிரஸ்.. இதை பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..

ராஜினாமா
காங்கிரஸ் இப்படி பெயரை வெளியிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மிலிந்த் நாயக் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.. இந்த வழக்கில் சுதந்திரமான, நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்று சொல்லி அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். எனினும் உண்மையிலேயே அதற்காகத்தான் ராஜினாமா செய்தாரா? அல்லது பெயர் வெளிவந்துவிட்டதால் ராஜினாமா செய்தாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன..

பிரச்சாரம்
அதேசமயம், ஆளும் பாஜகவுக்கு இது மிகுந்த பின்னடைவு தரும் விஷயமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோவாவில் காங்கிரஸ் சரிவை நோக்கி செல்லும்நிலையில், மம்தா பானர்ஜி கோவாவுக்கு குறி வைத்து வரும் நிலையில், பாஜகவுக்கு இந்த சம்பவம் இழுக்கை தேடி தந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்ல, விரைவில் சட்டமன்றத் தேர்தல் கோவாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த பிரச்சனையை பிரச்சாரத்தின்போது, நிச்சயம் காங்கிரஸ் கையில் எடுக்கும் என்றே தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications