2300 கோடி திருடிய 22 வயது சிங்கப்பூர் இளைஞன்! விமானம், சொகுசு கார், பங்களா.. சின்ன தவறால் சிக்கினான்
சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒரே நாளில 2300 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரண்சியை திருடி உள்ளார். அமெரிக்க வக்கீலகளின் கூற்றுப்படி, சிங்கப்பூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் தலைமையிலான கும்பல் ஒன்று $245 மில்லியனுக்கும் (சுமார் ₹2,300 கோடி) அதிகமான கிரிப்டோகரன்சியைத் திருடி உள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய கிரிப்டோ திருட்டுகளில் ஒன்று என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளளது.
கடந்த ஆகஸ்ட் 2024-இல் நடந்த இந்தத் திருட்டுக்குப் பிறகு, 22 வயது இளைஞர்கள் குழு. வெளிநாட்டுச் சொகுசு கார்கள், தனிப்பட்ட ஜெட் விமானங்கள், பிரம்மாண்ட பங்களாக்கள், ஆடம்பரக் கடிகாரங்கள் மற்றும் இரவு விடுதி பார்ட்டிகள் என அசுரத்தனமாக செலவிட்டது. இந்தக் கும்பலின் தலைவன் 22 வயதான மலோன் லேம் , லாஸ் ஏஞ்சலஸ் இரவு விடுதி ஒன்றில் ஒரே இரவில் $569,000-க்கும் (சுமார் ₹5.4 கோடி) மேல் செலவிட்டிருக்கிறான். 2025ம் ஆண்டு செப்டம்பரில மியாமியில் கைது செய்யப்பட்ட மலோன் லேம், 2026ம் ஆண்டு அதாவது இந்த மாதம் (செப்டம்பர்) 8ம் தேதி அன்று கூட்டுக் சதி செய்து இப்படி திருடியதாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதற்கு எப்படி திட்டமிடப்பட்டது என்பதை பார்ப்போம்.

வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு பெரிய கிரிப்டோ முதலீட்டாளருக்குத் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவர்கள் பேசும் போது, "நாங்க கூகுள் மற்றும் ஜெமினி கிரிப்டோ நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் கணக்கில் ஏதோ பிரச்சனை இருப்பதாக தெரிகிறது" என்று பேசி அவரை நம்ப வைத்திருக்கிறார்கள்.
அவருடைய 'கூகுள் டிரைவ்' ரகசியக் குறியீடுகளையும் ஏமாற்றி வாங்கிய சிங்கப்பூர் இளைஞர் மலோன் லேம் தலைமையிலான குழுவினர், அவரிடமிருந்த 4,100-க்கும் அதிகமான பிட்காயின்களை நைஸாகத் திருடிவிட்டார்கள். இந்த கொள்ளை அடித்தது 22 வயதே ஆன மலோன் லேம் என்பவனும், அவனது கூட்டாளிகளான வீர் சேத்தல், செரானோ என்பவர்களும் தான் என்பது தெரியவந்தது.
கையில் பல ஆயிரம் கோடி பணம் கிடைத்ததும், இந்த இளைஞர்கள் அதைத் தண்ணீராகச் செலவழித்துள்ளனர். சிங்கப்பூர் இளைஞன் மலோன் லேம், ஒரே ஒரு இரவில் நைட் கிளப்பில் அடித்த கூத்துக்கு மட்டும் ₹4.7 கோடி செலவு செய்துள்ளான். போர்ஷே, லம்போர்கினி, பெராரி என 30-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கார்களை வாங்கி குவித்துள்ளனர். இதில் மலோன் லேம் ஒரே ஒரு கைக்கடிகாரத்தை வாங்க 16 கோடி செலவு செய்துள்ளான். வீர் சேத்தல் என்பவன் தனது பெற்றோருக்குக் கோடிகள் மதிப்புள்ள லம்போர்கினி காரைப் பரிசளித்துள்ளான். வீட்டுத் துணி துவைக்கும் மெஷினுக்குள் ₹4 கோடி ரொக்கப் பணத்தை ஒளித்து வைத்திருந்திருக்கிறான்.
இந்தத் திடீர் பணத்தைப் பார்த்த மற்ற ரவுடிகள், சேத்தலின் பெற்றோரைக் கடத்தி, "உன் பையன் திருடி வச்சிருக்க பணத்தைக் குடு" என்று மிரட்டி உள்ளார்கள். ஆனால் நல்லவேளையாகப் போலீசார் அவர்களைக் காப்பாற்றிவிட்டனர்
Malone Lam, 22, a citizen of Singapore and recent resident of Miami, pleaded guilty today in connection with his role as ringleader of an international cybercrime conspiracy that used social engineering to steal and launder cryptocurrency valued at more than 5 million,… pic.twitter.com/R8Nnz9a7n6
— U.S. Attorney DC (@USAO_DC) September 8, 2026
போலீசில் மாட்டிக்கொண்டது எப்படி?
செரானோ என்பவன் ₹250 கோடி பணத்தை மாற்றும்போது, தனது கம்ப்யூட்டரின் ஐபி முகவரியை மறைக்க மறந்துவிட்டான். அந்த முகவரியை வைத்துப் போலீஸ் தேடிச் சென்றபோது, அவன் மாதத்திற்கு ₹39 லட்சம் வாடகை கொடுத்து ஒரு பிரம்மாண்ட வீட்டில் ஜாலியாக இருந்ததை கண்டுபிடித்தனர்.
இறுதியாக செரானோ கை மணிக்கட்டில் ₹4 கோடி வாட்சை கட்டிக்கொண்டு விமான நிலையத்திற்கு வந்தபோது போலீசில் சிக்கி கொண்டான். மலோன் லேம் மியாமி நகரில் இருந்த அவனது சொகுசு பங்களாவில் கைது செய்யப்பட்டான்.
இந்த வழக்கில் மொத்தம் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் நீதிமன்றத்தில் ஆஜரான முக்கியக் குற்றவாளி மலோன் லேம், தான்தான் இந்தக் கொள்ளைக்குத் தலைவன் என்பதை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டான். இவர்களுக்கு உதவிய சிலருக்கு ஏற்கனவே 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
