Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு உயிர் கொடுத்த கொரோனா.. இன்று தூக்கிலிடுவது நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போதை கடத்தல் வழக்கில் கைதான இந்திய வம்சாவளி வாலிபரை இன்று தூக்கில் போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக சிங்கப்பூர் நீதிமன்றம் தற்காலிகமாக கருணை காட்டி தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். கடந்த 2009ம் ஆண்டு 4272 கிராம் ஹெரான் கடத்திய வழக்கில் கைதானார்.

சிங்கப்பூர் சட்டப்படி 15 கிராமிற்கு மேல் ஹெராயின் வைத்திருந்தால் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்க முடியும் என்பதன் அடிப்படையில் நாகேந்திரனுக்கு கடந்த 2010ல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

சோதனை

சோதனை

ஆனால் அவருக்கு மனநிலை சரியில்லாததால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிககை எழுந்தது. இதை தொடர்ந்து மனோதத்துவ நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில் போதைப்பொருள் கடத்திய போது அவர் தெரிந்தே தான் கடத்தினார் என்று சான்று அளிக்கப்பட்டது.

கொரோனா

கொரோனா

இதையடுத்து அவரது தூக்கு தண்டனை இன்று நிறைவேற்றப்பட இருந்தது. இந்நிலையில அதனை ரத்து செய்யக்கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆன்ட்ரூ பாங்க் அமர்வில் விசாரணை வர இருந்த நிலையில், நாகேந்திரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அவரது வழக்கறிஞர் எம்.ரவி. நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தூக்கு தண்டனை நிறுத்தம்

தூக்கு தண்டனை நிறுத்தம்

அப்போது நீதிபதிகள் இதை எதிர்பார்க்கவில்லை. தண்டனை நாளை (இன்று) நிறைவேற்றப்பட உள்ள நிலையில் நாகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. எனவே மனிதாபிமான அடிப்படையில் தண்டனை அளிப்பதை செயல்படுத்த முடியாது. என்று கூறி தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

போதைப்பொருள் கடத்தல்

போதைப்பொருள் கடத்தல்

இதன் காரணமாக இன்று தூக்கில் தொங்கவிட்டப்பட்டு உயிரிழக்க வேண்டிய நாகேந்திரன் கொரோனா காரணமாக தற்காலிகமாக உயிர் தப்பி உள்ளார். ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு சரியான பின்னர் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும். நீதிமன்றம் இதற்கான உத்தரவை அடுத்த அமர்வில் தெரிவிக்க உள்ளது. சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தினால் மிக கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. உச்ச கட்டமாக தூக்கு தண்டனையும் வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தான் நாகேந்திரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+