சிங்கப்பூர் செல்லும் சென்னை பயணிகளுக்கு அதிர்ச்சி.. திடீரென வந்த ஷாக் அறிவிப்பு! என்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமானச் சேவைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களில் ஒன்றாக இருக்கும் சிங்கப்பூருக்குச் செல்லும் விமானச் சேவை கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கில் வெடித்துள்ள போர் சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இப்போது வளைகுடாவில் நேரடித் தாக்குதல்கள் எதுவும் இல்லை என்றாலும் ஹார்முஸ் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெட் எரிவாயு விலையும் ஏறியுள்ளது. இது விமான நிறுவனங்களுக்குக் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Flight Air India Singapore

ஏர் இந்தியா

இதற்கிடையே ஜூன் முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான காலக்கட்டத்தில், சில வழித்தடங்களில் விமானச் சேவைகள் குறைக்கப்படவும், தற்காலிகமாக நிறுத்தப்படவும் உள்ளன. எரிபொருள் விலை உயர்வு மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் போன்ற சவால்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் எரிபொருள் தட்டுப்பாட்டால் ஜூலை வரை அனைத்துச் சர்வதேச விமானங்களும் ரத்து எனப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஏர் இந்தியா இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த திடீர் சேவை குறைப்பிற்கு இரண்டு முக்கிய காரணங்களை ஏர் இந்தியா முன்வைக்கிறது.. முதலில் வான்வெளி கட்டுப்பாடுகள்.. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மேலாகப் பறக்க நிலவும் தடைகளால் நீண்ட தூரப் பயணங்களுக்கான செலவு அதிகரித்துள்ளது. அடுத்து எரிபொருள் விலை.. சர்வதேச விமானங்களுக்கான ஜெட் எரிபொருள் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. கடைசி நேரத்தில் பயணிகளைத் திணறடிப்பதை விட, முன்கூட்டியே திட்டமிட்டுச் சேவைகளைச் சீரமைப்பதே புத்திசாலித்தனம் எனக் கருதி ஏர் இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விமான சேவை

அதன்படி வட அமெரிக்கா சேவையைப் பொறுத்தவரை டெல்லி - சிகாகோ சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மும்பை - நியூயார்க் & டெல்லி - நெவார்க் (Newark) சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ, டொராண்டோ மற்றும் வான்கூவர் நகரங்களுக்கான விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தப் பிராந்தியத்திற்கு ஒரே பாசிட்டிவ் செய்தியாக மும்பை - நியூயார்க் சேவை இனி தினசரிச் சேவையாக இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பாரிஸ், ரோம், சூரிச், வியன்னா, மிலன் மற்றும் கோபன்ஹேகன் ஆகிய நகரங்களுக்கான வாராந்திர விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மெல்போர்ன் மற்றும் சிட்னிக்கு தினமும் இயங்கிய விமானங்கள் இனி வாரத்திற்கு 4 முறை மட்டுமே இயங்கும்.

ஆசியப் பிராந்தியங்கள்

ஆசியா மற்றும் பிற பகுதிகளிலும் விமானச் சேவை கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. டெல்லி - ஷாங்காய் விமானங்கள் ஆகஸ்ட் வரை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மும்பை - டாக்கா, டெல்லி - மாலே விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாங்காக், கோலாலம்பூர், காத்மாண்டு, கொழும்பு, ஹனோய் மற்றும் ஹோ சி மின் சிட்டி ஆகிய நகரங்களுக்கான விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை- சிங்கப்பூர்

மேலும், இந்தியர்கள் பயணிக்கும் ரூட்களில் முக்கியமானது சிங்கப்பூர். அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து பல ஆயிரம் பேர் சிங்கப்பூர் செல்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். இதற்கிடையே சென்னை - சிங்கப்பூர் விமானச் சேவையும் கூட தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த ரூட்களில் புக் செய்தோருக்கு இரு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு மாற்று விமானங்கள் அல்லது வேறு ரூட் மூலம் செல்லலாம். அல்லது தேதி மாற்றம் அல்லது முழுத் தொகை ரீஃபண்ட் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் இந்தத் தகவல்களைச் சரிபார்க்குமாறு ஏர் இந்தியா அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது கசப்பான செய்திதான். குறிப்பாக சென்னை - சிங்கப்பூர் போன்ற பிசியான வழித்தடங்களில் சேவைகள் நிறுத்தப்படுவது பயணிகளைப் பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+