அடேங்கப்பா.. சிங்கப்பூர் வேற லெவல்! நம்ம ஊருடன் ஒப்பிட்டு வியந்த இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்!

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: என்ன இருந்தாலும் சிங்கப்பூர் சிங்கப்பூர்தான்யா.. என்று அந்நாட்டுக்கு பயணித்து வந்த பலரும் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி என்னதான் இருக்கிறது சிங்கப்பூரில்? இந்தியாவிலிருந்து சென்ற சாப்ட்வேர் என்ஜினியர் நச் என 4 பாயிண்ட்களை அடுக்கி சிங்கப்பூருடன் இந்தியாவை ஒப்பிட்டிருக்கிறார்.

அமன் என்கிற இந்திய சாப்ட்வேர் என்ஜினியர், உணவு, போக்குவரத்து, டிஜிட்டல் வளர்ச்சி, கலாச்சாரம் என 4 விஷயங்களில் இரு நாடுகளையும் ஒப்பிட்டிருக்கிறார்.

India job jobs

சிங்கப்பூர் போக்குவரத்து

சிங்கப்பூரில், பேருந்து, ரயில்கள் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை அந்நாட்டு மக்கள் கவுரவ குறைச்சலாக பார்ப்பதில்லை என்று அமன் கூறியுள்ளார். அதாவது சிங்கப்பூரில் COE எனப்படும் வழிமுறை பின்பற்றப்படுவதால், இந்தியாவில் கார்களை வாங்குவதை விட, அந்நாட்டில் கார்களை வாங்குவது 5 மடங்கு விலை அதிகமானதாக இருக்கிறது. எனவே பெரிய பெரிய நிறுவனங்களின் சிஇஒக்கள் கோட் சூட் அணிந்துக்கொண்டு, பேருந்துகளில் பயணிக்கிறார்கள் என கூறியுள்ளார்.

நெரிசல் இல்லாத சிங்கப்பூர்

அமன் கூறியது உண்மைதான். சிங்கப்பூரில் கார் வாங்குவது கொஞ்சம் காஸ்ட்லி. அதாவது இந்தியாவில் ரூ.40 லட்சம் கொடுத்தால் நல்ல தரமான கார் வாங்கலாம். ஆனால், சிங்கப்பூரில் இதற்கு ரூ.1 கோடி வரை செலவாகும். காரின் விலை என்னவோ ரூ.40 லட்சம்தான். ஆனால், சாலையில் அந்த காரை ஓட்ட தனியாக லைசென்ஸ் வாங்க வேண்டும். இதற்கு ரூ.40-50 லட்சம் வரை செலவாகும். ஏனெனில் சிங்கப்பூர் என்பது சிறிய தீவு நாடு. போக்குவரத்து நெரிசல்கள் கார்களால்தான் ஏற்படுகிறது. எனவே கார்களின் எண்ணிக்கையை கன்ட்ரோல் செய்ய இவ்வளவு கட்டுப்பாடுகள் உள்ளன. இதைத்தான் COE வழிமுறை என சொல்கிறார்கள்.

சிங்கப்பூர் உணவு கலாச்சாரம்

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் வீடுகளில் மளிகை பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால், சிங்கப்பூரில் இது காஸ்ட்லியான வேலை. எனவே பெரும்பான்மையான மக்கள் நாள் முழுவதற்குமான உணவை வெளியில்தான் சாப்பிடுகிறார்கள் என அமன் கூறியுள்ளார்.

இதுவும் உண்மைதான். அந்நாட்டில் 'ஹாக்கர் சென்டர்கள்' மிகவும் பிரபலம். ஒரே இடத்தில் அனைத்து வகையான உணவுகளும், குறைந்த விலையில் கிடைக்கும் இடத்தைதான் ஹாக்கர் சென்டர்கள் என்கிறார்கள். இந்தியாவில் ரோட்டுக்கடைகளுடன் இதனை ஒப்பிடலாம். ஆனால், அந்நாட்டில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள் இருக்கின்றன. எனவே நம்மூர் ரோட்டுக்கடைகளை போல இல்லாமல், பயங்கர ஹைஜீனிக்காக இருக்கும்.

எனவே மக்கள், இங்கு சாப்பிடுவதற்கு முன்னர் தங்களுக்கான டேபிளில் குடை அல்லது டிஷ்யூ பேப்பர் பாக்கெட்டை கொண்டு இடம் போட்டு வைத்துவிடுவார்கள். இது அங்கு இயல்பான நடைமுறை. விலையும் குறைவு, தரமும் அதிகம் என்பதால் மக்கள் பெரும்பாலும் வெளியிலேயே சாப்பிடுகிறார்கள்.

டிஜிட்டல் ஆளுமை

சிங்கப்பூர் வந்த பின்னர், ஜெராக்ஸ் மெஷின் எப்படி இருக்கும் என்பதையே நான் மறந்துவிட்டேன். அந்த அளவுக்கு இந்த நாடு முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கிறது என்று அமன் கூறுகிறார். சிங்கப்பூரில் 'சிங்பாஸ்' எனும் செயலி மூலம் நீங்கள் எல்லவற்றையும் செய்துக்கொள்ளலாம். வங்கி சேவைகள், மருத்துவம், வரி செலுத்துவது என அனைத்தையும் இதில் செய்துக்கொள்ள முடியும்.

ஆனால் நம்மூரில், RTO வெப்சைட்டுக்கு சென்று, அபராதம் செலுத்த முயன்றால் அது இந்த ஜென்மத்திற்கு நடக்காத காரியம். ஒவ்வொரு வெப்சைட்டிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. இவை நீண்ட காலமாக கண்டுக்கொள்ளப்படாமல் இருக்கிறது என்பதுதான் நம்மூரின் மிகப்பெரிய பின்னடைவு.

தனிமனித சுதந்திரம்

அதேபோல சிங்கப்பூரை பொறுத்தவரை, பொதுவெளியில் உங்களை யாரும் எதுவும் கண்டுக்கொள்ள மாட்டார்கள். என்னப்பா.. சாப்பிட்டியா? என்று கூட கேட்க மாட்டார்கள். அவர்கள் உண்டு, அவர்கள் வேலை உண்டு என்று இருப்பார்கள் என அமன் கூறியுள்ளார்.

நம்மூரில் அப்படி கிடையாது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்கு பேசிக்கொள்வார்கள். எதையாவது கொடுத்த உதவுகிறார்களோ இல்லையோ, ஆனால் அவர்கள் பேச்சு துணைக்கு, ஆறுதலுக்கு என 4 பேர் இருப்பார்கள். சிங்கப்பூரில் அப்படி கிடையாது. ஆரம்பத்தில் சிங்கப்பூர் என்ன இப்படி இருக்கிறதே என்று கேட்க தோன்றலாம். ஆனால், அந்நாட்டு மக்கள் தனிமனித சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கிறார்கள் என்று அமன் கூறியுள்ளார்.

இந்த 4 மேட்டர்களில், உங்களை கவர்ந்தது எது? இந்தியா சிங்கப்பூரை போல மாறினால் நன்றாக இருக்குமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+